பெண் அரசியல்

பெண் அரசியல்

பெண் அரசியல் - நர்மதா; பக்.227; ரூ.260; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 78; ✆ 044-4855 7525.

2019-ஆம் ஆண்டு மார்ச் 25-இல் 'பெண்' என்ற அமைப்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்து அண்மைக் காலம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களோடு சமூக ஊடகங்களில் நூலாசிரியர் உரையாடிய கருத்துகள்தான் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

'ஒவ்வொரு ஆணும் தனக்கென, தனது முன்னேற்றத்துக்கென ஓர் ஏவல் அடிமையாக, காவல் தெய்வமாக பெண்ணொருத்தி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக, தீர்மானமாக, திடமான முடிவோடு இருக்கிறான். ஆணின் அடாவடிகளைச் சகித்துக் கொண்டு அனைத்து துயரங்களையும் மென்று விழுங்குகிற ஒரு மெளன சாட்சியாக பெண் மாறினால் மட்டுமே பிரச்னையற்று நகரும் பெண் வாழ்க்கை. இதனை உணர்ந்து இனியேனும் தங்களை, தமது வாழ்க்கை முறையை புதுப்பித்துக் கொள்ள பெண்கள் தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படத் தொடங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான பெண் விடுதலை சாத்தியமாகும்; பெண் மனித மாண்புடன் வாழ முடியும்' என வலியுறுத்துகிறது.

'இன்றைய சூழலில் ஆண்- பெண் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய சூழல் இருப்பதால் வீட்டு வேலைகளையும் நாம் பகிர்ந்து கொள்வோம்' என்று முன்வரும் ஆண்கள் மிக மிகக் குறைவு. கூடுதல் உழைப்பினால் சீர்கெட்டுப் போகும் உடல்நலத்தையும் மறந்து கடுமையாக உழைத்துதான் பல பெண்கள் தமது உரிமையை- சுய மரியாதையை நிலை நாட்டி வருகிறார்கள் என்பது வருத்தம் தரும் உண்மை. 'மீட்பர்களுக்காக காத்திருந்தால் மீட்சி வரவே வராது. தங்கள் வலிகள், தாம் புறக்கணிக்கப்படுவது என்று எல்லாவற்றையும் பெண்கள் தைரியமாகப் பேச வேண்டும்' என பெண் இனத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையை இந்த நூல் அளிக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com