கடவுளைத் தேடி வந்த கடவுள்

கடவுளைத் தேடி வந்த கடவுள்

கடவுளைத் தேடி வந்த கடவுள் (ரஷ்ய மூலம் - நிக்கோலஸ் நோடோவிச், தமிழில்: சி.ஆர்.ரவீந்திரன்); பக்.175; ரூ.200; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 17; ✆ 044- 24332682.

1877-78- ஆம் ஆண்டுகளில் கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்த நூலாசிரியர் ஆய்வு நோக்கில், இந்தியாவுக்கும் வருகை புரிந்து லடாக் தலைநகர் லெஹ்-ல் உள்ள மிகப் பெரிய ஹெமிஸ் மடாலயத்தைப் பார்வையிட்டார். சிகிச்சைக்கு வந்திருப்பதாகக் கூறி, முதன்மை லாமாவின் ஒப்புதலுடன் இயேசு நாதர் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளை மொழிபெயர்ப்பாளரின்

உதவியுடன் குறிப்பெடுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் வாழ்க்கை குறித்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தை இந்நூலில் முன்வைக்கிறார்.

குழந்தைப் பருவத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த இயேசு புத்த மதத்தவர்களுடன் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்ததாகவும், ஹிந்து, பெüத்தம் உள்ளிட்ட மதக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதாகவும், மூடப் பழக்கவழக்கங்கள், பல தெய்வ வழிபாடு, சிலை வழிபாடு, பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு எதிராக அவர் பிரசாரம் செய்ததோடு மட்டுமல்லாது, வைசியர், சூத்திரர்களிடம் மிகவும் பரிவுடன் இருந்ததாகவும், அப்போது அவர் அத்வைதக் கோட்பாடுகளை வலியுறுத்தியதாக நூலாசிரியர் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசு நாதர் குறித்து பரவலாக அறியப்பட்ட கருத்துகளுடன் இந்நூல் அநேக இடங்களில் முரண்படுவதோடு மட்டுமல்லாது அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது. நூலாசிரியர் மேற்கொண்ட நீண்ட பிரயாணமும், ஆய்வை பதிப்பித்து வெளிக்கொணர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் மலைப்பை ஏற்படுத்துகின்றன. கிறிஸ்தவத்தின் தேவ தூதரான இயேசுவின் அறியப்படாத பக்கங்களை வெளிக்கொணர்ந்த நூலாசிரியரின் அசாத்திய துணிச்சல் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com