பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு

பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு

பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு - கேப்ரியே ஜுவோ துப்ரே (தமிழில் - வானதி); பக். 136; ரூ.160; கிழக்கு பதிப்பகம், சென்னை- 14; ✆ 044 4200 9603.

1917- ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஆய்வாளர் எழுதி வெளியான "பல்லவா ஆன்டிக்விடீஸ் (இரு பாகங்கள்' என்ற ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பு.

பல்லவர்களின் காலத்தைக் கணிக்கவும் அரசர்களின் பட்டி யலைச் சரிபார்க்கவும் சில புதிய முறைகளைக் கையாண்டுள்ள ஆசிரியர், அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

காஞ்சி கைலாசநாதர் கோயில், பனைமலைக் குடைவரைக் கோயில் இரண்டையும் ஒப்பிட்டு இவற்றைக் கட்டியவர் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்மன் என்னும் ஆசிரியர்,

கல்வெட்டுகளையும் கட்டடக் கலையையும் சான்றுகளாகக் கொள்கிறார்.

பொதுவாக, கோயில் கருவறைச் சுவர்களில் சிற்பங்கள் இருப்பதில்லை என்றாலும் இவ்விரு கோயில்களிலும் புடைப்புச் சிற்பங்களாக சோமாஸ்கந்தர் இருப்பதைக் குறிப்பிடுகிறார் (அச்சிறுப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில் உள்பட மேலும் சில பல்லவர் காலக் கோயில்களிலும் சோமாஸ்கந்தரைக் காணலாம்).

கல்வெட்டுகளின்வழி குகைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் ஆசிரியர், தளவானூர், சீயமங்கலம், மகேந்திரவாடியிலுள்ள பழைய பல்லவ கிரந்த எழுத்துகள், திருச்சி, பல்லாவரக் குகை

களிலுள்ள மாற்றமடைந்த காலத்தால் பிந்தைய பல்லவ கிரந்த எழுத்துகளை வகைப்படுத்தி உருவாக்கிய மன்னர்கள் யாராக இருக்க முடியும் எனச் சிறப்பாக ஆராய்கிறார்.

பல்லவர் காலத் தொன்மைச் சின்னங்களைப் பட்டியலிடும் ஆசிரியர், பல்லவர் கால உச்சத்தையும் வீழ்ச்சியையும் ஆய்வின்வழி உறுதி செய்கிறார். நூல் எழுதப்பட்டு நூறாண்டுகளில் பல்லவர்கள் தொடர்பாக எத்தனையோ புதிய விஷயங்கள் கண்டறியப்பட்ட நிலையிலும் ஆதாரமான முதல் நூல்களில் ஒன்றென இதைக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com