தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்; முனைவர் அ. ஜம்புலிங்கம்; பக் - 364; ரூ.500; இந்துமதி பதிப்பகம்; 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் - 608001; ✆9345979726.

சங்ககால பழந்தமிழ் நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காலகட்டங்களில் எண்ணற்ற புலவர்களால் தனித்தனியே பாடப்பெற்ற செய்யுள்களின் தொகுப்புகளான இவை, பாடல்களின் உள்கருத்துகள், நெறி மரபு சார்ந்து அகப் பாடல்கள் என்றும் புறப் பாடல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆலம் விதைபோல கண்ணுக்குத் தெரியாமல் இரு மனங்கள் என்ற நிலத்தில் விழுந்து யாரும் அறியாமல் நாள்தோறும் வளர்ந்துகொண்டேயிருப்பதே உண்மைக் காதல். அத்தகைய, படிக்குந்தோறும் இன்பம் நல்கும்வகையில் சங்ககாலப் பாடல்களில் உள்ள காதல் பாடல்கள் குறித்து பதினாறு கட்டுரைகளில் அருமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

நற்றிணையில் தோழியின் சொல்லாற்றலும் நட்பின் இலக்கணமும், குறுந்தொகையில் உவமைத் தொடர்களும் வாழ்வியல் உண்மைகளும், பரிபாடலில் காதற் காமமும் வையை ஆறும் குறித்து கருத்தாழத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கலித்தொகையில் உள்ள நாடக அமைப்பும் புராணக் கூறுகளும், முல்லைப் பாட்டு எடுத்தியம்பும் காதல் வாழ்வும் போர் நிகழ்வும், குறிஞ்சிப் பாட்டு கூறும் களவு ஒழுக்கமும் அறத்தொடு நிற்றலும் ஆகியவை உரிய வரிகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com