ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்? முனைவர் மணி கணேசன், பக்.160, விலை ரூ.150, இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி- 620003; ✆ 94432 84823.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகள், அன்றாடம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், கல்வித் துறையில் மாற்றங்கள் குறித்து விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிறது இந்த நூல். கரோனாவால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களால் மாணவர்களுக்கு ஏற்பட்ட சலிப்பு, அனுப்ப மறுத்த பெற்றோர், தன்னார்

வலர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் போன்ற பிரச்னைகளால் கற்பித்தலில் தற்போது பெரும் தொய்வையும், மீண்டும் சிறப்பாகச் செயல்பட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பயனற்றுக் கிடக்கும் கற்றல் வளங்கள், ஆசிரியர் தேர்வில் மாற்றம், பதிவேடுகளிலிருந்து ஆசிரியர்களுக்கு எப்போது விடுதலை, தனியார் பள்ளி மாணவர்களைத் தக்க வைக்குமா அரசுப் பள்ளிகள், ஆளில்லா வகுப்பறையை நோக்கி நகர்கிறதா?, கல்வி, நாளும் குவியும் வழக்குகளால் பாழாகும் கல்வி என 27 அத்தியாயங்களிலும் ஆசிரியர்களின் மனநிலை, மனக்குமுறல்களை நூலாசிரியர் தெளிவாகப் படம்பிடித்து காட்டுகிறார்.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள், தவிப்புகள், வேதனைகள், ஏமாற்றங்களை நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com