அயோத்தி

அயோத்தி

அயோத்தி - ஆர்.ராதாகிருஷ்ணன்; பக்.196; ரூ.230; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆ 81480 66645.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்து தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது வரையிலான சம்பவங்களை இந்த நூல் விரிவாக அலசுகிறது. போராட்டம் ஆங்கிலேய ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது என்றாலும், நீதிமன்றத்தில் சட்டப் போராட்டமாக 1949-இல்தான் தொடங்கியது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ஹிந்து - முஸ்லிம் என இரு தரப்பினரின் நிலைப்பாடுகள் அவ்வப்போது நிலவிய அரசியல் பின்னணியுடன் விளக்கப்பட்டிருப்பதே இந்த நூலின் சிறப்பு.

ஒரு சில ஆண்டுகளிலேயே பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டிருந்தால், யாருக்குச் சாதகமாக வந்திருந்தாலும் அதற்கு எதிராக பெரும் அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கும் என்று நூலாசிரியர் தெரிவித்திருக்கிறார். தீர்ப்பை எதிர்த்தோ அல்லது மறுஆய்வு செய்தோ எந்த அமைப்பும் மேல்முறையீடு செய்யவில்லை என்பது, இப்பிரச்னை எப்படியாவது முடித்து வைக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் பெரும்பாலானோர் இருந்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இனி மத ரீதியான மோதல்களைத் தவிர்க்க, அயோத்தி அனுபவம் அடித்தளமாக இருக்க வேண்டும் என்ற கருத்து நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடுநிலையாக வரலாற்றுப் பின்னணியுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அயோத்திப் பிரச்னையின் நீண்ட நெடிய வரலாறை வாசிக்கும்போது, "நடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' என்ற எண்ணமே மேலோங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com