என் தேசம் ஒரே தேசம்
SWAMINATHAN

என் தேசம் ஒரே தேசம்

என் தேசம் ஒரே தேசம் - வானதி சீனிவாசன்; பக்.392; ரூ.425; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044- 4200 9603.

பாஜக மகளிரணி தேசியத் தலைவரான நூலாசிரியர் இந்திய தேசத்தை வலம் வந்த பயண நினைவுகளின் தொகுப்பு. வழக்கமான பயணக் கட்டுரை இலக்கணங்களைத் தாண்டி

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஏதாவதொரு விஷயத்தை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது இந்த நூல்.

கிட்டத்தட்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பயணம் செய்து அங்குள்ள மக்களுடன் பழகி, தங்கி தனது அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூலாசிரியர், தான் முழுநேர அரசியல்வாதி மட்டுமின்றி, திறமைமிக்க எழுத்தாளர் என்பதையும் நிரூபிக்கிறார்.

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது அறிந்த விஷயம்தான் என்றாலும், 'சண்டிகர்; வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'அந்தமான்; அழகிய தீவுக் கூட்டத்தில் குறையும் தமிழர்களின் எண்ணிக்கை' ஆகிய கட்டுரைகள் வியப்பான தகவல்களைத் தருகின்றன.

பெரும்பாலும் அரசியல் சார்ந்த பயண அனுபவங்கள் என்றாலும், அரசியலைக் கடந்து பல்வேறு விஷயங்களை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். 'நாகாலாந்து மதம் மாறினாலும் கலாசாரத்தை மறக்காத மக்கள்', 'லடாக்: புத்தம் செழிக்கும் இமயத்தின் அற்புதம்', 'தெலங்கானா', 'ஐதராபாத் பாக்கியலட்சுமி அம்மன் தரிசனமும், மசூதித் தொழுகையும் போன்ற பல கட்டுரைகள் அதற்கும் சான்று.

இந்தியாவில் மொழி, இனம், மதம், ஜாதி, உணவு, உடை என எத்தனையோ வேறுபாடுகள்இருந்தாலும், அதில் ஓர் ஒற்றுமை இழையோடுவதை தனது எழுத்தால் நிரூபிக்கிறார் நூலாசிரியர். தேசப் பற்றாளர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com