நீர் விளக்கு

நீர்  விளக்கு

நீர் விளக்கு - பென்னிகுக் - பொ.கந்தசாமி; பக்.260; ரூ.350; கவிமுரசு பதிப்பகம், சிவகாசி - 626130; ✆ 9080461839.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் உயிர்நாடியான முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதற்கான நோக்கம், அதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுக், அவருக்கு முன்பாகவே முயற்சியை மேற்கொண்ட ராமநாதபுரம் மன்னர் சேதுபதி என்று தொடங்கி, தற்போதைய நிலவரம் வரை பல்வேறு தகவல்கள் சுவாரசியமாக இந்த வரலாற்றுப் புதினத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அணையின் அமைவிடம், நீளம் உயரம், சுரங்கங்கள், துணை அணைகள், கிளை ஆறுகள், துணை ஆறுகள், பயன்பெறும் பகுதிகள், பென்னிக்கு உதவிய மண்ணின் மைந்தர்களான பேயத்தேவர், ஆங்கூர் ராவுத்தர், ஆனைவிரட்டி ஆங்கத் தேவர், காடுவெட்டி கருத்தக்கண்ணுத் தேவர் உள்ளிட்ட பலரையும், கொடைக்கானலுக்கும் அவருக்குமான தொடர்புகளையும், அணைச்சாமியார், டேவிட் என்ற இரு பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சென்னை மாகாண ஆளுநர்- திருவிதாங்கூர் சமஸ்தான ஒப்பந்தம், சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய், கல்லணை, பவானி சாகர் அணைகள், சூயஸ் கால்வாய் ஆகியவற்றின் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் புள்ளிவிவரத் தரவுகளுடன் பதிவு செய்திருப்பது சிறப்பு.

ஆங்கிலேயராக இருந்தும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்களால் கடவுளாகக் கொண்டாடப்படும் பென்னிகுக்கின் எதிர்பார்ப்பில்லாத உழைப்புடன் இன்றைய அரசு அதிகாரிகள், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை ஒப்பிட்டு அதற்கான மதிப்பீட்டை வாசகர்களிடமே ஒப்படைத்திருக்கிறார் நூலாசிரியர். நல்லதொரு நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com