வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் அரசியல்

வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் அரசியல்

வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் அரசியல் - சூ. சக்கரவர்த்தி மாரியப்பன்; பக். 134; ரூ.160; சுவாசம் பதிப்பகம், சென்னை- 127; ✆ 81480 66645

மேலைநாடுகளில் கூட வாக்குப்பதிவு இயந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்படாத நிலையில், இந்தியாவில் செயல்படுத்தி சாதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

1977-ஆம் ஆண்டில் அப்போதைய தேர்தல் ஆணையர் எஸ்.எஸ். ஸக்தர் எண்ணத்தில் உருவானதுதான் வாக்குப்பதிவு இயந்திரம். 1980-ஆம் ஆண்டில் முதலாவது வாக்குப்பதிவு இயந்திரத்தை எல்காட் நிறுவனம் உருவாக்கியது. முதல்முறையாக 1982-ஆம் ஆண்டு கேரளத்தின் பரூர் தொகுதியில் பரீட்சார்த்த முறையில் 50 வாக்குச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, 1983 ஆண்டு வரை 8 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைத் திருத்தாமல் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் 1984-ஆம் ஆண்டில் தடைவிதித்தது. 1988-இல் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறிய பிறகு 1989-முதல் வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்தது. இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், தேர்தல் முடிவுகளால் அரசியல் கட்சிகள் எழுப்பிய சந்தேகம், அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம், எதிரான வழக்குகளும், தீர்ப்புகளும், இயந்திரங்களின் எதிர்காலம், அது பற்றிய கேள்விகள், பதில்கள் என பல விளக்கங்களை ஒப்புமையுடன் ஆசிரியர் இந்த நூலில் பட்டியலிட்டுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றி அதன் செயல்பாடுகள், வரலாற்றுப் பின்னணியுடன் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com