ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல் - மால்கம் க்ளாட்வெல் (தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்); பக்.448; ரூ.666; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; ✆ 72000 50073.

கண்சிமிட்டும் நேரத்தில் வெளிப்படும் சிந்தனைத்திறன் மூலம் சரியான முடிவை எப்படி எடுப்பது என்பது குறித்து இந்த நூல் விவரிக்கிறது. அந்த இரு விநாடிகளில் எடுக்கும் முடிவுகள் சக்தி வாய்ந்ததாகும்; சில சமயங்களில் சிறப்பானதாகவும் அமையக் கூடும். இப்படி, நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதை மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போது 'ப்ளிங்க்' புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக் கூடிய உலகத்தை புரிந்துகொள்ளும் உத்திகளை விவரித்துள்ளார்.

கணவன்-மனைவி இடையேயான திருமண வாழ்க்கை, அறிமுகம் இல்லாத மனிதரைச் சந்திக்கும்போது துல்லியமான முடிவை எடுப்பது உள்ளிட்ட குறுகிய நேரத்தில் முடிவெடுக்கும் பல்வேறு ஆய்வுகளை நூலாசிரியர் மேற்கோளாக காட்டியுள்ளார்.

அதிக தகவல்கள் நல்லது என நினைப்பவர்கள், அது எங்கெல்லாம் செயல்படாது என்பது பற்றிய நிகழ்வுகளை 'தின்-ஸ்லைசிங்' அத்தியாயம் உள்ளிட்ட பல இடங்களில் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். உளவியல் துறையில் செய்யப்பட்ட புதுமையான, அசாதாரணமான பல ஆய்வுகள் நூலின் மையமாக உள்ளது.

குறுகிய தருணங்களில் ஒருவர் கவனம் செலுத்தும்போது, பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மனம் எப்படி வேலை செய்யும் என்பதையும், மனிதர்கள் எடுக்கும் முடிவுகளில் உள்ள பலம், பலவீனம் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவதன் விளைவுகளையும் இந்த நூலில் காணலாம். இந்த நூல் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com