பேரரசின் சிதைவுகள்

பேரரசின் சிதைவுகள்

பேரரசின் சிதைவுகள்: முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இனத்துவமும் தேசியவாதமும் - கோர்கி ஐ. மிர்ஸ்கி; தமிழில் - க. விஜயகுமார்; பக். 296; ரூ. 320: தமிழோசை பதிப்பகம், 21/8 கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் சாலை, கணபதி, கோவை - 641 006; 97884 59063.

தேசிய இனங்கள் தொடர்பான பிரச்னை மீண்டும் உலகெங்கும் விவாதிக்கப்படும் நிலையில், பல்வேறுபட்ட இனங்களையும் ஒருங்கிணைத்து வல்லரசாகத்திகழ்ந்த சோவியத் ஒன்றியம் நொறுங்கியதன் பின்னணியில் இனப் பிரச்னை பற்றி இந்த நூலில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

சோவியத் யூனியன் உடைந்ததற்கு இனச்சிக்கல் காரணமல்ல என்றாலும் பின்னர் தலையாயதாகிவிட்டது என்கிறார் நூலாசிரியர். இனங்கள், தேசம், அரசு பற்றி விவாதிக்கும்போது, நவீன காலத்தில் ஒருவரின் அடையாளத்தை, குலமும் வம்சாவளியுமே தீர்மானித்தது; மூன்றாம் உலக நாடுகளில் இன்னமும் இது நீடிக்கிறது எனச் சரியாகவே குறிப்பிடுகிறார்.

இன மோதல்களின் பண்பை விவரிக்கையில், எல்லை நிர்ணயம், பிரிவினை என்று வகைப்படுத்தி, அனைத்தையும் பட்டியலிடுகிறார். மத்திய ஆசியப் பகுதி நாடுகளின் இனப்பிரச்னைகளை விவாதிக்கும்போது, உஸ்பெகிஸ்தானில் வசிக்கும் தஜிக்குகள், தஜிகிஸ்தான் செல்ல விரும்பியதில்லை. ஆனால், இவர்களுக்கு சகிக்க முடியாத சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார். இந்தச் சூழ்நிலை மேலும் பல உலக நாடுகளில் பொருந்தக் கூடியதே.

துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், கஜக்ஸ்தான் பற்றித் தரவுகளுடன் விவாதிக்கும் ஆசிரியர், உக்ரைன் பற்றிய கட்டுரையில் ரஷியாவுடனான இன்றைய மோதலுக்கான மூலத்தைத் தொடுகிறார். முடிவாக, சோவியத்தின் அனைத்து முந்தைய குடியரசுகளுடன் சம்பந்தப்படும் ரஷிய தேசியவாதச் செயல்பாடுகளையும் குறிப்பிடுகிறார். தேசிய இனப் பிரச்னை பற்றிய ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com