வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள் - முனைவர் இல.ஜெயந்தி; பக்.324; ரூ.300; புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை- 8: ✆ 9884328642.

அருட்தந்தை என்று போற்றப்படும் வேதாத்திரி மகரிஷி தமிழில் 47 நூல்களையும், ஆங்கிலத்தில் 23 நூல்களையும் எழுதியுள்ளார். அவர் தமிழில் எழுதிய படைப்புகளை நூலாசிரியர் இந்நூலில் ஆய்வு நோக்கில் அலசுகிறார். மகரிஷியின் படைப்புகள் உரைநடை, கவிதை, உரை விளக்க நூல்கள் என்ற மூன்று வகைமைகளில் அமைந்துள்ளன. அவருடைய நடையியல் உத்திகள் தன்மை, முன்னிலை, ஒப்பீடு, எதிர், பொது, உடன்பாட்டு, வினா - விடை உள்ளிட்ட முறைகளில் உள்ளதாக விளக்கும் நூலாசிரியர், பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான சொற்களால் தம் எண்ணங்களை மகரிஷி எடுத்துரைப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

வாழ்வியல் சிந்தனைகள், மெய்யியல் சிந்தனைகள், மனிதவள மேம்பாட்டு சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ள கருத்துகள் தனிமனித அமைதி மூலம் உலக அமைதிக்கும் வழிகாட்டியாக திகழ்கின்றன.

மகரிஷியின் அத்தனை புத்தகங்களும் ரத்தின சுருக்கமாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன என்று எண்ணும் அளவுக்கு இந்த ஆய்வு நூல் திகழ்கிறது.

பகவத் கீதை, தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களில் உள்ள கருத்துகளோடு மகரிஷியின் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

மகரிஷியின் அனைத்து புத்தகங்களின் பெயர்கள், தலைப்புகள், கவிதைகள் என அனைத்தும் பட்டியலிட்டு காண்பிக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com