122. கல்லால் நீழல் - பாடல் 6

அருள் வழங்கும்
122. கல்லால் நீழல் - பாடல் 6

பாடல் 6:

    தக்கன் வேள்வி
    பொக்கம் தீர்த்த
    மிக்க தேவர்
    பக்கத்தோமே

விளக்கம்:

பொக்கம்=பொய், குற்றம்; வேள்விக்குரிய தன்மைகள் இன்றி செய்யப்பட்டமையால் போலி வேள்வி என்று தக்கன் செய்த வேள்வியை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தக்கன் செய்த வேள்வி முற்றுப் பெற்றிருந்தால் அவன் செய்த தவறு நிலைபெற்று ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்திருக்கும் அத்தகைய தவறு நடைபெறாத வண்ணம் திருத்திய தேவன் சிவபெருமான் என்ற பொருள் பட பொக்கம் தீர்த்த தேவர் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மிக்க=அருளும் தன்மை உடைய; பக்கத்தோம்=பக்கத்தில் உள்ளோம் பக்கம் என்ற சொல்லுக்கு சமீபம் என்று பொருள் கொண்டு சாமீப நிலையை அடையும் தகுதி பெற்ற அடியார்களை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்றும் பொருள் கொள்வதுண்டு.

பொழிப்புரை:

சிவபெருமானை அவமதிக்கும் நோக்கத்துடன் பெருமானை புறக்கணித்து தவறான முன்மாதிரியாக ஒரு வேள்வியைச் செய்வதற்கு தக்கன் முயற்சி செய்த போது, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைக்கு மாறாக வேள்வி செய்தல் தவறு என்பதை நிலைநிறுத்தும் வண்ணம், போலி வேள்வியை அழித்து வேதநெறியை நிலைநாட்டிய பெருமையினை உடையவர் சிவபெருமான். அவர் அடியார்களுக்கு வரம்பின்றி அருள் வழங்கும் கருணை உள்ளம் கொண்டவர். அத்தகைய பெருமானின் நெறியாகிய சிவநெறியைச் சார்ந்து பெருமானுக்கு அணுக்கத் தொண்டர்களாக நாம் விளங்குவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com