141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 7

திருவேடங்களின் பெருமையை
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 7


பாடல் 7:

    கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார் தமக்கு
    உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர்
    திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
    அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே

விளக்கம்:

இந்த பாடலில் பெருமானின் அடையாளங்களில் கோவணமும் ஒன்று என்பது உணர்த்தப் படுகின்றது. கரைதல்=தேய்தல், வருந்துதல், ஊனம்=குற்றம், குறைவு; கரைதல் என்ற சொல்லுக்கு குற்றம் என்றும் ஒரு பொருள் உள்ளது. இந்த பொருளினை உணர்த்துவதாக கொண்டு, பெருமானின் அடையாளங்கள் குற்றம் ஏதுமின்றி குணங்களுடன் திகழ்வதாக அளிக்கப்படும் விளக்கமும் பொருத்தமே.   
 
பொழிப்புரை:

பெருமானின் திருவேடங்களை மனதினில் தியானிக்கும் அடியார்களுக்கு வருத்தம் ஏதும் ஏற்படுவதில்லை. அந்த திருவேடங்களின் பெருமையை எடுத்துரைக்கும் அடியார்களுக்கு வாழ்வினில் குறையேதும் ஏற்படுவதில்லை; அவர்கள் உலகினில் நிலையான புகழுடன் வாழ்வார்கள். இவ்வாறு அடியார்களை சிறப்பாக வாழவைக்கும் தன்மை கொண்ட அடையாளங்களை பெற்றுள்ள இறைவன், அலைகள் பொங்கியெழும் வண்ணம் நீர்ப்பெருக்கினை உடைய திருந்துக்தேவன்குடி தலத்தில் வீற்றிருக்கின்றான். அவன் தனது இடுப்பினில் வெண்மை நிறம் கொண்ட கோவணத்தை அணிந்துள்ளான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com