யுகி பாம்ப்ரிக்கு ஐ.டி.எஃப். பட்டம்

யுகி பாம்ப்ரிக்கு ஐ.டி.எஃப். பட்டம்

புதுதில்லி, மே 2: தில்லியில் நடைபெற்ற ஐ.டி.எஃப். டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் "இளம்புயல்' யுகி பாம்ப்ரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.   சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்

புதுதில்லி, மே 2: தில்லியில் நடைபெற்ற ஐ.டி.எஃப். டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் "இளம்புயல்' யுகி பாம்ப்ரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

  சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னிலை வீரர் ராவென் கிளாசென்-ஐ 7-6 (5), 7-6 (5) என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியுறச் செய்தார்.

  பாம்ப்ரியைக் காட்டிலும் உலகத் தரவரிசையில் 1134 இடங்கள் முன்னிலை பெற்றவர் கிளாசென் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த வாரம் இதே மைதானத்தில் முடிவுற்ற மற்றொரு ஐடிஎஃப் போட்டியில், சக நாட்டு வீரர் விஷ்ணு வர்தனைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பாம்ப்ரி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  "இப் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தபோது பட்டம் வெல்வேன் என நினைக்கவில்லை. கிளாசென் உள்பட முன்னிலை வீரர்கள் பலர் பங்கேற்றிருந்ததால் பட்டம் வெல்வது கடினம் என நினைத்தேன். ஆனால் தற்போதைய முடிவைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என வெற்றிக்குப் பின்னர் பாம்ப்ரி கூறினார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஜூனியர் பட்டத்தை பாம்ப்ரி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  அடுத்து குவைத்தில் மே 18 முதல் நடைபெற உள்ள ஐடிஎஃப் பியூச்சர் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com