யுவராஜ் சிங் "ஹாட்ரிக்' வீண்

டர்பன், மே 2:  தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரின் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்

டர்பன், மே 2:  தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரின் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

  பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி வரை பஞ்சாப் அணியே வெல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்த எதிர்பார்ப்பு தலைகீழாகிவிட்டது.

  பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங், பந்துவீச்சில் நிகழ்த்திய ஹாட்ரிக், பேட்டிங்கில் விரைவாக எடுத்த அரை சதம் அத்தனையும் வீணானது. இருப்பினும் ஆட்ட நாயகனாக அவரே தேர்வு செய்யப்பட்டார்.

  முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் ரைடர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரிலேயே பதான் பந்துவீச்சில் அவுட்டானார். அதன் பிறகு வந்த கோஸ்வாமி (10), பிஸ்னாய் (18), காலிஸ் (27), உத்தப்பா (19), கோஹ்லி (16) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானாலும் அணியின் ஸ்கோர் உயர்ந்துகொண்டே இருந்தது.

    காலிஸ், உத்தப்பா, பெüச்சர் ஆகிய மூன்று பேரையும் தொடர்ந்து வீழ்த்தி "ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்தினார் யுவராஜ் சிங். அதன்பிறகு வான் டெர் மெர்வ் 19 பந்துகளில் 35 ரன்களை அதிரடியாகக் குவித்து அணிக்கு கெüவரமான ஸ்கோரைப் பெற்றுத்தந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் அப்துல்லா 4 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. யுவராஜ் சிங் ஒருவர் மட்டும் அதிரடியாக 34 பந்துகளில் அரை சதம் எடுத்து அணி எளிதான வெற்றியைப் பெறும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக அந்த அணி தோல்வியைத் தழுவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com