ராஜஸ்தானிடம் வீழ்ந்தது டெக்கான்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடிவந்த ஹைதராபாத்
ராஜஸ்தானிடம் வீழ்ந்தது டெக்கான்!

போர்ட்எலிசபெத், மே 2: இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடிவந்த ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 2-வது தோல்வியைச் சந்தித்தது.

  போர்ட் எலிசபெத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தொடரின் 25-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் அணி.

  தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வென்றுவந்த டெக்கான் அணி, செஞ்சுரியனில் கடந்த 30-ம்தேதி நடந்த போட்டியில் டெல்லி டெவில்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியுற்றது. தற்போது, ராயல்ஸிடம் வீழ்ந்தது அணியின் முன்னேற்றத்தைப் பாதித்துள்ளது.

  டாஸ் வெற்றி: "டாஸ்' வென்ற டெக்கான் அணி முதலில் பேட் செய்வதாகக் கூறி, 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைக் குவித்தது.

  அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி, 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து அபார வெற்றி பெற்றது.

  நடப்புச் சாம்பியன் ராஜஸ்தானுக்கு, இந்த 3-வது வெற்றி அரையிறுதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 7 ஆட்டங்களில் விளையாடி 7 புள்ளிகளைச் சேர்த்துள்ளது.

  மோசமான தொடக்கம்: 142 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னிங்ûஸத் தொடங்கிய ராஜஸ்தான் அணி, இதுவரை இப் போட்டியில் காணாத தொடக்க சரிவைச் சந்தித்தது. ஸ்மித், அஸ்நோத்கர் ஆகிய தொடக்க வீரர்கள் "டக் அவுட்' ஆயினர்.

  3 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததால் விரைவிலேயே அணி ஆட்டமிழந்துவிடும் என நினைத்த ஆர்வலர்களுக்கு யூசுப் பதான் உள்ளிட்ட பின்வரிசை வீரர்களின் ஆட்டம், புது எழுச்சியளித்தது.

  கார்செல்டைனைத் தொடர்ந்து, அபிஷேக் ரௌத் ஆட்டம் அணியின் வெற்றிக்கு உறுதுணையளித்தது. ரௌத் 23 பந்துகளில் 36 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இடையில் யூசுப் பதான், வழக்கம்போல அதிரடியை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 22 ரன்களைக் குவித்து வெற்றி நம்பிக்கையை வலுப்படுத்தினார். 2 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.

  நெருக்கடி: யூசுப் பதான் ஆட்டமிழக்காதவரை வெற்றி உறுதி என்ற நிலை இருந்தது. ஒருகட்டத்தில் 13 பந்துகளில் 11 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. அந்நிலையில் பந்தைத் தூக்கி அடித்து கிப்ஸிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார் பதான். அதன் பிறகு என்ன நடக்குமோ என்ற ஆவலைப் பெற்ற ஆட்டத்தில் ரௌத், ஷேன் ஹார்வுட் ஜோடி வெற்றியை உறுதி செய்தது.

  நெருக்கடியான நிலையில் 22 ரன்களைக் குவித்த யூசுப் பதானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

  சுமன் 41 நாட் அவுட்: முன்னதாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் சுமன் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 41 ரன்களைக் குவித்தார். அதில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்படும்.

  முன்னதாக கேப்டன் கில்கிறிஸ்ட் 35 பந்துகளில் 39 ரன்களைக் குவித்து வெளியேறினார். அதில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். இவர், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 59 ரன்களைக் குவித்தார்.

  சர்மா 32 பந்துகளில் 38 ரன்களைச் சேர்த்தார். தலா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசினார்.

  சுருக்கமான ஸ்கோர்: டெக்கான் 141-5வி (கில்கிறிஸ்ட் 39 (35), ரோஹித் சர்மா 38 (32), சுமன் 41 (30) நாட் அவுட், ஹார்வுட் 2-25).

  ராஜஸ்தான் 19.4 ஓவர்களில் 142-7வி (கார்செல்டின் 39 (32), வார்னே 21 (17), ரௌத் 36 (23) நாட் அவுட், யூசுப் பதான் 24 (14), ஆர்.பி. சிங் 2-18, வேணுகோபால ராவ் 2-23).



இன்றைய மோதல்
 

பஞ்சாப் கிங்ஸ் - கோல்கத்தா ரைடர்ஸ்

(போர்ட்எலிசபெத், மாலை 4 மணி)

ராயல் சாலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

(ஜோகன்னஸ்பர்க், இரவு 8.15 மணி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com