சுடச்சுட

  

  2வது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா பேட்டிங்!

  By DIN  |   Published on : 06th November 2018 07:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  t20


  லக்னோ: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி களமறிங்க உள்ளது. இந்திய அணியில் உமேஷ் யாதவுக்குப் பதில் புவேனஷ்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

  இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. 

  இதில், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து 2வது ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் நோக்கில் இந்திய அணி களமறிங்க உள்ளது. 

  அதே நேரத்தில் 2வது ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கவுள்ளது.

  இன்றைய போட்டி நடக்கும் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் மைதானம் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தும் 52வது மைதானம் என்ற பெருமையைப் பெறுகிறது.

  இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் இந்த மைதானத்தில் விளையாடும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai