அகில இந்திய ஹாக்கி: செகந்திராபாத், சென்னை வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 11ஆவது அகில இந்திய ஹாக்கி


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 11ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 3ஆவது நாள் ஆட்டங்களில் செகந்திராபாத், சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், சென்னை ஐ.சி.எப். அணியும் மோதியதில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது. 2ஆவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அணியும் மோதின. இதில், 6-0  என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரயில்வே அணி வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com