இந்திய அணியின் பந்துவீச்சு பன்முகத்தன்மை வாய்ந்தது 

இந்திய அணியின் பந்துவீச்சு பன்முகத் தன்மை வாய்ந்தது என உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி
இந்திய அணியின் பந்துவீச்சு பன்முகத்தன்மை வாய்ந்தது 


புது தில்லி: இந்திய அணியின் பந்துவீச்சு பன்முகத் தன்மை வாய்ந்தது என உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை கூறியதாவது:
முந்தைய ஆண்டுகளில் வெற்றிக்காக இந்திய அணி பேட்ஸ்மேன்களை நம்பி வந்த நிலை காணப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பந்துவீச்சு அபாரமாக மேம்பட்டு, பல்வேறு வெற்றிகளை ஈட்டித் தந்துள்ளது. தற்போதைய பந்துவீச்சின் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. நமது வேகப்பந்து வீச்சு எதிரணிகளுக்கு கவலை தருவதாக அமைந்துள்ளது.

இந்த மாற்றம் ஓரே இரவில் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளாக இந்திய அணி நிர்வாகம், வேகப்பந்து வீச்சாளர்கள் தொகுப்பை உருவாக்கியது. சீரான வேகம், வெவ்வேறு வகைகளில் பந்துவீசும் திறனுள்ள வீரர்கள் தறபோதுள்ளனர்.

வேகமாகவும், தன்னம்பிப்கையுடனும், எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்ய நம்மால் முடியும். நமது வேகப்பந்து வீச்சு குறித்து பலரும் தற்போது பேசி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் அணியில் இடம் பெறாமல் இருந்த எனக்கு, ஒருநாள் வாய்ப்பு கிட்டும் என காத்திருந்தேன். அதன்படி கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி, அணியில் இடம் பெற்றேன் 
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com