துளிகள்...

தென்கொரியாவுக்கு எதிராக வரும் திங்கள்கிழமை முதல் ஜின்சுன்னில் தொடங்கவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடர், எஃப்ஐஎச் 
  • தென்கொரியாவுக்கு எதிராக வரும் திங்கள்கிழமை முதல் ஜின்சுன்னில் தொடங்கவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடர், எஃப்ஐஎச் மகளிர் உலக சீரிஸ் பைனல் போட்டிக்காக இந்திய அணி தயாராக உதவும். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீண்டுள்ள குர்ஜித் கெüர் மற்றும் எனக்கும் இது முக்கியமான தொடர் என கேப்டன் ராணி ராம்பால் கூறியுள்ளார்.
     
  • சீனாவின் நான்னிங்கில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது. நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 13 பேர் கொண்ட இந்திய அணி முதல் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதுகிறது. செவ்வாய்க்கிழமை பலம் வாய்ந்த சீனாவை எதிர்கொள்கிறது.
     
  • பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடி சதமடித்த இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய், தனது பெண் குழந்தை கடும் காய்ச்சால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பார்த்து விட்டு வந்து ஆடியதாக தெரிவித்துள்ளார். நான் அடித்த சதம் பெருமை வாய்ந்தது என ராய் கூறியுள்ளார்.
     
  • மோட்டார் பைக் வாகன ஓட்டிகளுக்கான டி20 வகையிலான இந்திய தேசிய ரேலி ஸ்பிரின்ட் சாம்பியன்ஷி போட்டி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் தொடங்குகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 120 மோட்டார் பைக் பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
     
  • குவாஹாட்டியில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com