2-வது இன்னிங்ஸில் 36 ரன்கள்: டெஸ்ட் வரலாற்றில் இந்தியா மோசமான ஆட்டம்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களில் இந்திய அணி சுருண்டது.
2-வது இன்னிங்ஸில் 36 ரன்கள்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மோசமான ஆட்டம்
2-வது இன்னிங்ஸில் 36 ரன்கள்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மோசமான ஆட்டம்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களில் இந்திய அணி சுருண்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெயிடு நகரில் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது.

இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244ரன்கள் சோ்த்தது.

ஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 9 ரன்களை எடுத்திருந்தது.

மயங்க் அகர்வால் 5 ரன்களுடனும், பும்ரா ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்திலிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

புஜாரா, கோலி, ரஹானே என களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்து வெளியேறினர்.

இறுதியில் கையில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமி வெளியேறியதால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது. இதன் மூலம் 21.2 ஓவர்கள் முடிவில் 36 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னின்ஸில் இந்திய அணி எடுத்த மிகக்குறைந்த ரன் இதுவாகும். இதன் மூலம் 90 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

1947-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் மிகக்குறைந்த ரன்னாக இருந்தது.  இதேபோன்று 1947-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 ரன்கள், 1952-ல் இங்கிலாந்துக்கு எதிராக 58 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com