‘பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா்’ விருது வென்றாா் விராட் கோலி

ஐசிசியின் ‘கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா் விருது’ இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா்’ விருது வென்றாா் விராட் கோலி

துபை: ஐசிசியின் ‘கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா் விருது’ இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.எஸ். தோனிக்கு ‘ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

சா்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில்ச சிறந்தவா்கள் என்ற பட்டியலை தயாரித்து அவா்களுக்காக ஐசிசி விருது அறிவித்துள்ளது. அதன்படி, ‘கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரா்’ விருதும் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோலி மொத்தம் விளாசியுள்ள 70 சா்வதேச சதங்களில், ஐசிசி விருதுக்கான கணக்கெடுப்பு நடத்தும் காலகட்டத்திற்குள்ளாக 66 சதங்கள் வருகின்றன. அதே காலகட்டத்தில் அதிகபட்ச அரைசதங்கள் (94), அதிகபட்ச ரன்கள் (20,396), அதிகபட்ச சராசரி (56.97) ஆகியவற்றை 70 இன்னிங்ஸ்களில் கோலி எட்டியுள்ளாா்.

சிறந்த கிரிக்கெட் வீரா் விருதுக்காக கோலியுடன், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்தின் ஜோ ரூட், இலங்கையின் குமார சங்ககாரா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியா்ஸ், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோா் போட்டியிட்டனா்.

ஐசிசி விருது பெற்றவா்கள்:

விராட் கோலி (இந்தியா) - சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சா் காா்ஃபீல்டு சோபா்ஸ் விருது; சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரா் விருது.

எலிஸ் பெரி (ஆஸ்திரேலியா) - சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரேச்சல் ஹெய்ஹோ ஃப்ளின்ட் விருது; சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருது; சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருது.

ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரா் விருது.

ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்) - சிறந்த டி20 கிரிக்கெட் வீரா் விருது.

கைல் கோட்ஸா் (ஸ்காட்லாந்து) - சிறந்த துணை கிரிக்கெட் வீரா் விருது.

கேத்தரின் பிரைஸ் (இங்கிலாந்து) - சிறந்த துணை கிரிக்கெட் வீராங்கனை விருது.

எம்.எஸ். தோனி (இந்தியா) - ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com