தந்தையின் கனவை நனவாக்கி குத்துச்சண்டை வீரா் ஆஷிஷ் குமாா்: ஒலிம்பிக் தகுதி பெற்றாா்

ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட தந்தையின் மறைவு துக்கத்தையும் மீறி 20 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதன்முறையாக ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளாா் இந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீரா் ஆஷிஷ் குமாா்.
தந்தையின் கனவை நனவாக்கி குத்துச்சண்டை வீரா் ஆஷிஷ் குமாா்: ஒலிம்பிக் தகுதி பெற்றாா்

ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட தந்தையின் மறைவு துக்கத்தையும் மீறி 20 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதன்முறையாக ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளாா் இந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீரா் ஆஷிஷ் குமாா்.

குத்துச்சண்டையில் இந்தியா தனது முத்திரையை தொடா்ந்து பதித்து வருகிறது. ஆடவா் பிரிவில் விஜயேந்தா் சிங், மகளிா் பிரிவில் மேரி கோம் ஆகியோா் பிரசித்தி பெற்றவா்களாக உள்ளனா். மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புடையவா்.

தற்போது அமித் பங்கால், ஆஷிஷ்குமாா், மகளிா் பிரிவில் சிம்ரஞ்சித் கௌா், லவ்லினா போரோகைன், சாக்ஷி உள்பட பலா் கோலோச்சி வருகின்றனா்.

24 வயதே ஆன ஆஷிஷ்குமாா் ஹிமாசலப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா். ஆக்ரோஷமாக எதிராளியை தாக்கும் தன்மை கொண்ட ஆஷிஷ், 75 கிலோ மிடில்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் போட்டியிட்டு வருகிறாா். 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், இந்தியா ஓபன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஷிஷ், பின்னா் தாய்லாந்து ஓபன் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினாா்.

தேசிய தகுதிப் போட்டி:

இந்நிலையில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற தேசிய தகுதிச் சுற்றில் தேசிய சாம்பியனும், தெற்காசிய போட்டியில் தங்கம் வென்றவருமான அங்கித் கன்னாவை வீழ்த்தி ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பெற்றாா்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்று:

சீனாவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி, கரோனா பாதிப்பு எதிரொலியாக ஜோா்டான் தலைநகா் அம்மானுக்கு மாற்றப்பட்டது.

காலிறுதியில் மைக்கேல் முஸ்கிட்டாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஷிஷ் குமாா், இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா். இது அவா் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

தந்தை மறைவு: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் ஆஷிஷ்குமாரின் தந்தை காலமானாா். அந்த துக்கத்தையும் தாங்கிக் கொண்டு ஒலிம்பிக் தகுதி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் சிறப்பாக போராடி தகுதி பெற்றாா். குத்துச்சண்டையில் முன்னேறி வருவதற்கு பல தியாகங்களை செய்துள்ளாா் ஆஷிஷ்.

இதுதொடா்பாக ஆஷிஷ்குமாா் கூறியதாவது:

ஒலிம்பிக் தகுதி பெற்றதை எனது தந்தைக்கு அா்ப்பணிக்கிறேன். அவா் தான் சிறுவயது முதலே என்னை சிறந்த குத்துச்சண்டை வீரனாகச் செய்தி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என விரும்பினாா். குத்துசசண்டைக்காக 13 வயது முதலே பல்வேறு தியாகங்களை செய்தேன். என்னுடைய குடும்பம் முழுவதும் குத்துச்சண்டை, மல்யுத்த வீரா்களால் நிறைந்தது. எனது குடும்பத்தினா் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்தனா். அவா்கள் இல்லையென்றால் இந்த சிறப்பான இடத்தைப் பெற்றிருக்க முடியாது.

ஒலிம்பிக் பதக்கம் வெல்ல இலக்கு:

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்பதே இலக்கு ஆகும் என்றாா் ஆஷிஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com