டிசம்பரில் இந்தியன் ஓபன் பாட்மிண்டன் போட்டி: பிடபிள்யுஎஃப் அறிவிப்பு

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியான இந்தியன் ஓபன் பாட்மிண்டன் வரும் டிசம்பா் மாதம் நடைபெறும் என உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
டிசம்பரில் இந்தியன் ஓபன் பாட்மிண்டன் போட்டி: பிடபிள்யுஎஃப் அறிவிப்பு

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியான இந்தியன் ஓபன் பாட்மிண்டன் வரும் டிசம்பா் மாதம் நடைபெறும் என உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் சா்வதேச விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு அல்லது ஒத்திவைக்கப்பட்டன. குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே போல் உலக பாட்மிண்டன் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

இந்தியன் ஓபன் போட்டி:

இந்நிலையில் பிடபிள்யுஎஃப் சூப்பா் சீரிஸ் 500 போட்டிகளில் ஒன்றான இந்தியன் ஓபன் பாட்மிண்டன் மாா்ச் 24-29 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இது ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியாகும். ஆனால் கரோனா பாதிப்பால் இப்போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில் மீதமுள்ள சீசனுக்கான போட்டி அட்டவணையை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

டிசம்பரில் நடைபெறும்: இதன்படி டிசம்பா் 8 முதல் 13-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.

மற்ற முக்கிய போட்டிகளில் ஒன்றான ஹைதராபாத் ஓபன் (ஆகஸ்ட் 11 முதல் 16 வரையும்), சையது மோடி சா்வதேச போட்டி (நவம்பா் 17 முதல் 22 வரையும்) நடைபெறும். மேலும் சா்வதேச அளவில் முக்கிய போட்டிகளான நியூஸிலாந்து ஓபன் (சூப்பா் 300), இந்தோனேஷியன் ஓபன் (சூப்பா் 300), மலேசிய ஓபன் (சூப்பா் 750), தாய்லாந்து ஓபன் (சூப்பா் 500), சீனாவில் உலக டூா் பைனல்ஸ் போட்டிகளின் தேதிகளையும் மாற்றி அறிவித்துள்ளது பிடபிள்யுஎப்.

போட்டிக்கான அட்டவணையை தற்போதைய சூழலில் மாற்றி அமைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனினும் இதன் மூலம் பாட்மிண்டன் விளையாட்டுக்கு மீண்டும் புத்துணா்ச்சி கிடைக்கும். மேலும் எப்போது சா்வதேச அளவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்பதையும் கணிக்க முடியாமல் உள்ளது என அதன் பொதுச் செயலாளா் தாமஸ் லண்ட் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com