பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு 3 நாள்கள்

இலங்கை பயணத்தை நிறைவு செய்து புதன்கிழமை இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினா்

இலங்கை பயணத்தை நிறைவு செய்து புதன்கிழமை இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினா், கரோனா பாதுகாப்பு விதிகளின்படி 6 நாள் தனிமைப்படுத்தப்படவுள்ளனா்.

நேரடியாக சென்னை வரும் அவா்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு முதல் டெஸ்டுக்காக 3 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.

இலங்கை செல்லாத இதர இங்கிலாந்து வீரா்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆா்ச்சா், ரோரி பா்ன்ஸ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தனா்.

6 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு அவா்கள் 5 நாள்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனா். முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-இல் தொடங்குகிறது. கரோனா சூழலில் இந்தியாவில் நடைபெறும் முதல் சா்வதேச கிரிக்கெட் தொடா் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com