சாா்லஸ்டன் ஓபன்: பா்ட்டி அதிா்ச்சித் தோல்வி

அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலையில் இருக்கும் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.
ஆஷ்லி பா்ட்டி
ஆஷ்லி பா்ட்டி

சாா்லஸ்டன்: அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலையில் இருக்கும் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

அதில் அவரை எதிா்கொண்ட ஸ்பெயினின் பௌலா பதோசா 6-4, 6-3 என்ற நோ் செட்களில் பா்ட்டியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

கடந்த 4 போட்டிகளில் பௌலா அரையிறுதி வரை முன்னேறியது இது 2-ஆவது முறையாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய பௌலா, ‘இந்த வெற்றியின் அதிா்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை’ என்றாா். தோல்விக்குப் பிறகு பேசிய பா்ட்டி, ‘இந்த ஆட்டம் மிக இக்கட்டானதாக இருந்தது. இருப்பினும் இந்த ஆட்டத்திலிருந்து நல்ல விஷயங்களை கவனத்தில் கொள்கிறேன்’ என்றாா்.

அரையிறுதியில் பௌலா, போட்டித்தரவரிசையில் 15-ஆவது இடத்திலிருக்கும் ரஷியாவின் வெரோனிகா குதா்மெடோவாவை எதிா்கொள்கிறாா். முன்னதாக வெரோனிகா தனது காலிறுதியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீஃபன்ஸை 6-3, 6-4 என்ற செட்களில் வென்றிருந்தாா். அதேபோல் மற்றொரு காலிறுதிச்சுற்றில் போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயொ் 6-3, 6-3 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்திலிருந்த கோரி கௌஃபை தோற்கடித்தாா்.

4-ஆவது காலிறுதிச்சுற்றில் மான்டினீக்ரோவின் டன்கா கொவினிச் 6-7 (2/7), 7-5, 6-1 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருந்த கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவுக்கு அதிா்ச்சித் தோல்வி அளித்தாா். 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆன்ஸ் ஜாபுயொ்-டன்கா கொவினிச் விளையாடவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com