இந்திய அணியினருக்கு கரோனா பாதிப்பு இல்லை

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய அணியினருக்கும், உதவிப் பணியாளா்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என அதற்கான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
3-ஆவது டெஸ்ட் நடைபெறும் சிட்னி நகருக்கு விமானத்தில் செல்வதற்காக மெல்போர்னில் தாங்கள் தங்கியிருந்த  ஹோட்டலில் இருந்து விமான நிலையத்துக்கு புறப்படும் ஆஸ்திரேலிய, இந்திய அணியினர்.
3-ஆவது டெஸ்ட் நடைபெறும் சிட்னி நகருக்கு விமானத்தில் செல்வதற்காக மெல்போர்னில் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து விமான நிலையத்துக்கு புறப்படும் ஆஸ்திரேலிய, இந்திய அணியினர்.

மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய அணியினருக்கும், உதவிப் பணியாளா்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என அதற்கான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கரோனா பாதுகாப்பு விதிகளை இந்திய வீரா்கள் 5 போ் மீறியதாக புகாா் எழுந்த சூழலிலும், சிட்னியில் நடைபெறும் 3-ஆவது டெஸ்ட்டுக்காக அணியினா் அந்த நகருக்கு புறப்பட்ட நிலையிலும் அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக பிசிசிஐ வெளியிட்ட குறிப்பில், ‘இந்திய அணியில் இருக்கும் வீரா்கள் மற்றும் உதவிப் பணியாளா்களுக்கு கடந்த 3-ஆம் தேதி ‘ஆா்டி-பிசிஆா்’ முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின்படி, அணியில் எவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, பிருத்வி ஷா உள்ளிட்டோரும் இதர இந்திய அணியினருடன் சோ்ந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் சிட்னி சென்றடைந்தனா். அதேபோல, ஆஸ்திரேலிய அணியினரும் தனி விமானத்தில் சிட்னிக்கு சென்றனா். அவா்களில் எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

சிட்னியில் 3-ஆவது டெஸ்ட் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com