இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

94 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து நான்காவது நாளில் ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 81 ரன்களையும், கேமரூன் கிரீன் 84 ரன்களையும், லாபுசாக்னே 73 ரன்களையும் குவித்தனர்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடித்து 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி தனது 4-வது இன்னிங்சை தொடங்கியது. 

தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். ஷிப்மான் கில்லும் 31 ரன்களில் வெளியேற அடுத்து வந்த புஜாரா 9 ரன்களையும், ரஹானே 4 ரன்களையும் எடுத்திருந்தபோது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com