உம்ரான் மாலிக்கிற்கு சௌரவ் கங்குலி புகழாரம்

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இன்று (புதன்கிழமை) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இன்று (புதன்கிழமை)  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பந்துவீச்சில் அவரது எகானமி 9.03 ஆகும். 

உம்ரான் மாலிக் குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறியதாவது:

“அவரது எதிர்காலம் அவருடைய கையில்தான் இருக்கிறது. அவர் தற்போது இருப்பது போலவே தன்னை முழு உடற்தகுதியுடன் வைத்துக் கொண்டு வேகமாகப் பந்துவீசினால் அவர் இந்திய அணியில் நீண்ட காலம் நீடிக்கலாம்” என்றார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான 18 பேர் அடங்கிய இந்திய அணி வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் உம்ரான் மாலிக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடவுள்ளார்.

வளர்ந்து வீரர்கள் குறித்து கங்குலி கூறியதாவது, “ இந்த ஐபிஎல் சீசனில் நிறைய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். சன் ரைசர்ஸ் அணிக்காக ராகுல் திரிபாதி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ராகுல் திவாட்டியா சிறப்பாக செயல்பட்டனர். பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக், மோசின் கான், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் தங்களது பந்துவீச்சுத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்” என்றார்.

ஜூன் 9ஆம் தேதி தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்க டி-20 தொடருக்கு கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com