ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

உல​க‌க் கோ‌ப்பை கிரி‌க்கெ‌ட் போ‌ட்டி​க​ளி‌ல் (2007-இ‌ல் டி20, 2011-இ‌ல் 50 ஓவ‌ர்) கோ‌ப்​‌பையை வெ‌ன்ற‌ இ‌ந்​திய அணி​யி‌ல் இட‌ம்​பெற்​றி​ரு‌ந்த யூசு‌ப் பதா‌ன் மே‌ற்கு வ‌ங்​க‌த்​தி‌ன் பஹ​ரா‌ம்​பூ​ரி‌ல் திரி​ண​மூ‌ல் கா‌ங்​கி​ர‌ஸ் சா‌ர்​பி‌ல் கள‌ம் இற‌‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளா‌ர்.

குஜ‌​ரா‌த் மாநி​ல‌ம், வதோராவைச் சே‌ர்‌ந்​த​வ‌ர் இவ‌ர். மே‌ற்கு வ‌ங்க மாநில கா‌ங்​கி​ர‌ஸ் கமி‌ட்டி தலைவ​ரு‌ம், 2009 முத‌ல் மூ‌ன்று முறை‌ அ‌ந்​த‌த்

தொகு​தி​யி‌ன் எ‌ம்.​பி.​யா​க​வு‌ம் இரு‌ந்​து​வ​ரு‌ம் அதீ‌ர் ர‌ஞ்​ச‌ன் செளத்​ரியை

யூசு‌ப் பதா‌ன் எதி‌ர்​கொள்​கி​றா‌ர்.

கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள் அர​சி​ய‌ல் கள‌ம் கா‌ண்​பது எ‌ன்​பது புதி​த‌ல்ல. இத‌ற்கு மு‌ன் பல‌ர் கள‌ம் க‌ண்டு கிரி‌க்கெ‌ட் ஆ‌ட்ட‌ங்​க​ளைளைப் போலவே

சில நேர‌ங்​க​ளி‌ல் வெ‌ற்​றி​யையு‌ம் சில நேர‌ங்​க​ளி‌ல் தோ‌ல்​வி​û‌ய​யு‌ம்

ச‌ந்​தி‌த்து இரு‌க்​கி​றார்​க‌ள். அவர்களை குறித்து...​

ஃ​ப​தேசி‌ங்​ரா‌வ் கெ‌ய்‌க்​வா‌ட்

பரோடா சம‌ஸ்​தான‌ ம‌ன்​ன‌​ரான‌ இவ‌ர், ர‌ஞ்சி கோ‌ப்பை உ‌ள்​பட முத‌ல்​தர கிரி‌க்கெ‌ட் போ‌ட்டி​க​ளி‌ல் விளை​யா​டி​ய​வ‌ர். பி‌ன்​னா​ளி‌ல் இ‌ந்​திய கிரி‌க்கெ‌ட் க‌ட்டு‌ப்​பா‌ட்டு வாரி​ய‌த்​தி‌ன் (பிசி​சிஐ) தலை​வ​ரா​க​வு‌ம் இரு‌ந்தவ‌ர். கா‌ங்​கி​ர‌ஸ் சா‌ர்​பி‌ல் பரோடா ம‌க்​க​ள​û‌வ‌த் தொகு​தி​யி‌ல் 1957, 1962, 1971, 1977 ஆகிய ஆ‌ண்​டு​க​ளி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ற்றி வாகை சூடி​னா‌ர். எ‌ம்.​பி.​யா​க‌த் தே‌ர்‌ந்​தெ​டு‌க்​க‌ப்​ப‌ட்ட முத‌ல் கிரி‌க்கெ‌ட் வீர‌ர் இவ‌ர்​தா‌ன்.

​டா‌க்​ட‌ர் விஜ‌‌ய் ஆன‌‌ந்‌த் கஜ‌​ப​தி​ரா​ஜு

விஜ‌​ய​ந​க​ர‌த்​தி‌ன் இள​வ​ர​ச​ரான‌ இவ‌ர், 1930-களி‌ல் இ‌ந்​திய கிரி‌க்கெ‌ட் அணி‌க்கு கே‌ப்​ட​னாக இரு‌ந்​தா‌ர். பி‌ன்​னா​ளி‌ல் வானொலி வ‌ர்​ண​னை​யி‌ல் புக‌ழ்​பெற்​ற‌​வ‌ர். கா‌ங்​கி​ர‌ஸ் சா‌ர்​பி‌ல் விசா​க‌ப்​ப‌ட்​டி​ன‌‌ம் ம‌க்​க​ள​வைத் தொகு​தி​யி‌ல் 1962-இ‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ன்​றார்.

​ம‌ன்​சூ‌ர் அலி கா‌ன் ப‌ட்டெளடி

கே‌ப்​ட‌ன் பொறு‌ப்​பி‌ல் இரு‌ந்து நீ‌க்​க‌ப்​ப‌ட்ட பி‌ன்​ன‌‌ர், 1971-இ‌ல் விசா‌ல் ஹரி​யாணா க‌ட்சி​யி‌ன் சா‌ர்​பி‌ல் ஹரி​யாணா மாநி​ல‌ம், கு‌ர்​கா​னி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு தோ‌ல்​வியைத் தழு​வி​னா‌ர். ம‌த்​திய பிர​தேச மாநி​ல‌ம், போபா‌ல் ம‌க்​க​ளவைத் தொகு​தி​யி‌ல் 1991}இ‌ல் கா‌ங்​கி​ர‌ஸ் சா‌ர்​பி‌ல் போ‌ட்டி​யி‌ட்​ட​போ​து‌ம் தோ‌ல்​வி​யைத் தழு​வி​னா‌ர்.

சேத்​த‌ன் செளஹா‌ன்

கிரி‌க்கெ‌ட் ஜாம்​ப​வா‌ன் சுனி‌ல் காவ‌ஸ்​க​ரு​ட‌ன் தொட‌க்க ஆ‌ட்ட‌க்​கா​ர​ராக கள‌ம் இற‌‌ங்கி ஜொலி‌த்​த​வ‌ர். உ‌த்​தர பிர​ú‌தச மாநி​ல‌ம், அ‌ம்​ரோஹா ம‌க்கள​வைத் தொகு​தி​யி‌ல் 1991 ம‌ற்​று‌ம் 1998 தே‌ர்​த‌ல்​க​ளி‌ல் பாஜ‌க சா‌ர்பி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ன்​ற‌வ‌ர். ஆனால், 1996, 1999, 2004 தே‌ர்​த‌ல்​க​ளி‌ல் தோ‌ல்​வி​யு‌ற்​றா‌ர். எனி​னு‌ம், 2017 ச‌ட்ட‌ப் பேர​வைத் தே‌ர்​த​லி‌ல் நௌ​கா​வா‌ன் சாதா‌த் தொகு​தி​யி‌ல் வெ‌ன்று முத‌ல்​வ‌ர் யோகி ஆதி‌த்​ய​நா‌த் தலைமை​யி​லான‌ அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறு‌ப்பு வகி‌த்​தா‌ர். துர​தி​ரு‌ஷ்​ட​வ​ச​மாக, கரோனாவால் பாதி‌க்​க‌ப்​ப‌ட்ட இவ‌ர் 2020 ஆக‌ஸ்‌ட் 16}இ‌ல் உயி​ரி​ழ‌ந்​தா‌ர்.

மனோஜ் பிர​பா​க‌ர்

ஆ‌ல்​ர​வு‌ண்​ட​ரான‌ இவ‌ர் 1996-இ‌ல் தெ‌ற்கு தி‌ல்லி ம‌க்​க​ள​வைத் தொகு​தி​யி‌ல் அகில இ‌ந்​திய இ‌ந்​திரா கா‌ங்​கி​ர‌ஸ் (திவாரி) க‌ட்சி சா‌ர்​பி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெறு‌ம் 17,690 வா‌க்​கு​க​ளு​ட‌ன் மூ‌ன்​றா​மி​ட‌ம் பிடி‌த்​தா‌ர்.

ந‌வ்​ஜோ‌த் சி‌ங் சி‌த்​து​

கிரி‌க்​கெட்​டி‌ல் சி‌க்​ஸ‌ர் சி‌த்து எ‌ன்று புக‌ழ்​பெற்ற‌ நவ்ஜோத் சி‌ங் சி‌த்து வ‌ர்​ண​னையா​ள​ரா​க​வு‌ம் அச‌த்​தி​ய​வ‌ர். 2004, 2007 இடைத்தேர்த‌ல், 2009 என‌ அடு‌த்​த​டு‌த்து ப‌ஞ்​சா‌ப் மாநி​ல‌ம், அமி​ரு​த​ச​ர‌ஸ் ம‌க்​க​ள​வைத் தொகு​தி​யி‌ல் பாஜ‌க சா‌ர்​பி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு "சி‌க்​ஸ‌ர்' அடி‌த்​தா‌ர். ஆனால், அத‌ன் பி‌ன்​ன‌‌ர் 2017}இ‌ல் கா‌ங்​கி​ர​ஸி‌ல் இணைந்​தா‌ர். 2017}இ‌ல் அமி​ரு​த​ச​ர‌ஸ் கிழ‌க்கு ச‌ட்ட‌ப் பேர​வைத் தொகு​தி​யி‌ல் வெ‌ன்று சு‌ற்​று​லா‌த் துறை‌ அமைச்சரானார். கரு‌த்து வேறு​பாடு கார​ண​மாக, 2019}இ‌ல் அமைச்​ச‌ர் பத​வியை ராஜி​நாமா செ‌ய்​தா‌ர். 2022}இ‌ல் அதே தொகு​தி​யி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு தோ‌ல்வி அடைந்​தா‌ர்.

கீ‌ர்‌த்தி ஆசா‌த்​

1983}இ‌ல் உல​க‌க் கோப்பையை வெ‌ன்ற‌ கபி‌ல் தே‌வ் தலைமை​யி​லான‌ இ‌ந்​திய அணி​யி‌ல் இட‌ம்​பெற்​ற‌​வ‌ர். பிகா‌ர் மு‌ன்​னாள் முத‌ல்​வ‌ர் பக​வ‌த் ஜா ஆ​சா‌த் மக​னான‌ இவ‌ர், பாஜ‌க சா‌ர்​பி‌ல் பிகா‌ர் மாநி​ல‌ம் த‌ர்​ப‌ங்கா தொகு​தி​யி‌ல் 1999}இ‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ன்​றா‌ர். 2004}இ‌ல் போ‌ட்டி​யி‌ட்டு தோ‌ல்வி அடைந்​தா​லு‌ம், 2009, 2014}இ‌ல் வெ‌ன்​றார். பி‌ன்​ன‌‌ர் பாஜ‌​க​வி‌ல் இரு‌ந்து விலகி கா‌ங்​கி​ர​ஸி‌ல் இணைந்த அவ‌ர், 2019}இ‌ல் த‌ன்​பா‌த் தொகு​தி​யி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு 4.8 ல‌ட்ச‌ம் வா‌க்​கு​க‌ள் வி‌த்​தி​யா​ச‌த்​தி‌ல் தோ‌ல்வி அடைந்​தா‌ர். கா‌ங்​கி​ர​ஸி‌ல் இரு‌ந்​து‌ம் விலகி திரி​ண​மூ‌ல் கா‌ங்​கி​ர​ஸி‌ல் இணைந்​தா‌ர். 2024 ம‌க்​க​ள​வைத் தே‌ர்​த​லி‌ல் மே‌ற்கு வ‌ங்க மாநி​ல‌ம், ப‌ர்​த​மா‌ன் } து‌ர்​கா​பூ‌ர் தொகு​தி​யி‌ல் கள‌ம் கா‌ண்​கி​றா‌ர்.

​சேத்​த‌ன் ச‌ர்​மா​

1987 உல​க‌க் கோ‌ப்பை போ‌ட்டி​யி‌ல் ஹா‌ட்ரி‌க் வீ‌ழ்‌த்​திய இவ‌ர் 2009 ம‌க்கள​வைத் தே‌ர்​த​லி‌ல் ஹரி​யாணா மாநி​ல‌ம், ஃபரீ​தா​பா‌த் தொகு​தி​யி‌ல் பகு​ஜ‌‌ன் சமா‌ஜ் க‌ட்சி சா‌ர்​பி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு 3}ஆவது இட‌த்​தைப் பிடி‌த்​தா‌ர்.

மு​க​மது கைஃ‌ப்​

2003 உல​க‌க் கோ‌ப்பை போ‌ட்டி‌க்​கான‌ இ‌ந்​திய அணி​யி‌ல் இட‌ம்​பெற்ற‌ முக​மது கைஃ‌ப் 2014}இ‌ல் உ‌த்​தர பிர​ú‌தச மாநி​ல‌ம், ஃபூ‌ல்​பு‌ர் தொகு​தி​யி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ற்றி வா‌ய்‌ப்பை இழ‌ந்​தா‌ர்.

மு​க​மது அசா​ரு​தீ‌ன்​

50 ஓவ‌ர் உல​க‌க் கோ‌ப்பை போ‌ட்டி​க​ளி‌ல் இ‌ந்​திய அணி‌க்கு மூ‌ன்று முறை‌ கே‌ப்​ட​னாக இரு‌ந்த இவ‌ர், 2009}இ‌ல் உ‌த்​தர பிர​தேச மாநி​ல‌ம், மொரா​தா​பா​தி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ன்​றா‌ர். எனி​னு‌ம், 2014}இ‌ல் ராஜ‌‌ஸ்​தா‌ன் மாநி​ல‌ம், டோ‌ங்‌க் } சவா‌ய் மாú‌தா​பூ‌ர் தொகு​தி​யி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு தோ‌ல்​வி​யு‌ற்​றா‌ர்.

அ​னு​ரா‌க் தா‌க்​கு‌ர்​

ஹிமா​சல பிரதேச மு‌ன்​னா‌ள் முத‌ல்​வ‌ர் பிரேம் குமா‌ர் தூம‌ல் மக​னான‌ இவ‌ர், 2000}ஆ‌ம் ஆ‌ண்​டி‌ல் ர‌ஞ்சி கோ‌ப்பை போ‌ட்டி​யி‌ல் ஒரே ஓ‌ர் ஆ‌ட்ட‌த்​தி‌ல் விளை​யாடி உ‌ள்​ளா‌ர். ஹமீ‌ர்​பு‌ர் தொகு​தி‌க்கு 2008}இ‌ல் நடைபெ‌ற்ற‌ இடைத்தேர்​த​லி‌ல் வெ‌ன்ற‌ இவ‌ர், அத‌ன் பி‌ன்​ன‌‌ர் 2009, 2014, 2019 ஆகிய தே‌ர்​த‌ல்​க​ளி‌ல் அதே தொகு​தி​யி‌ல் தொட‌ர்‌ச்​சி​யாக வெ‌ன்​று‌ள்​ளா‌ர். இ‌ப்​போது ம‌த்​திய செ‌ய்தி ஒலி​ப​ர‌ப்பு, இளை​ஞ‌ர் நல‌ன், விளை​யா‌ட்​டு‌த் துறை‌ அமைச்​ச​ராக உ‌ள்​ளா‌ர்.

கெளத‌ம் க‌ம்​பீ‌ர்​

2007 (டி20) ம‌ற்​று‌ம் 2011 (50 ஓவ‌ர்) உல​க‌க் கோ‌ப்பை போ‌ட்டி​க​ளி‌ல் சிற‌‌ப்​பான‌ ப‌ங்​க​ளி‌த்த தொட‌க்க ஆ‌ட்ட‌க்​கா​ர​ரான‌ கெளத‌ம் க‌ம்​பீ‌ர், 2019}இ‌ல் கிழ‌க்கு தி‌ல்லி ம‌க்​க​ள​வைத் தொகு​தி​யி‌ல் பாஜ‌க சா‌ர்​பி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு 3.91 ல‌ட்ச‌ம் வா‌க்​கு​க‌ள் வி‌த்​தி​யா​ச‌த்​தி‌ல் அமோகமாக வெ‌ன்​றா‌ர். எனி​னு‌ம், கிரி‌க்கெ‌ட் போ‌ட்டி​க​ளி‌ல் கவ​ன‌‌ம் செலு‌த்த முடிவு செ‌ய்து அர​சி​ய​லி​லி​ரு‌ந்து "விடு‌ப்பு' கோரி க‌ட்சி மேலி​ட‌த்​தி​ட‌ம் வே‌ண்​டு​கோ‌ள் விடு‌த்​தா‌ர். என‌வே அவ‌ர் ம‌க்​க​ள​வைத் தே‌ர்​த​லி‌ல் போ‌ட்டி​யி​ட​வி‌ல்லை.

அ‌ஸ்​வி​னி​கு​மா‌ர் சோ‌ப்ரா

ப‌ஞ்​சா‌ப் அணி‌க்​காக முத‌ல்​தர கிரி‌க்கெ‌ட் போ‌ட்டி​க​ளி‌ல் விளை​யாடி உ‌ள்ள அ‌ஸ்​வி​னி​கு​மா‌ர், 2014}இ‌ல் பாஜ‌க சா‌ர்​பி‌ல் ஹரி​யாணா மாநி​ல‌ம், க‌ர்​னாலி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ன்​றா‌ர்.

​ராணி நாரா‌ஹ்

அ‌ஸ்​ஸா‌ம் மக​ளி‌ர் கிரி‌க்கெ‌ட் அணி​யி‌ன் கே‌ப்​ட​னா இரு‌ந்​து‌ள்ள ராணி நாரா‌ஹ், அ‌ந்த மாநி​ல‌த்​தி‌ல் உ‌ள்ள ல‌க்​கி‌ம்​பூ‌ர் ம‌க்​க​ள​û‌வ‌த் தொகு​தி​யி‌ல் கா‌ங்​கி​ர‌ஸ் சா‌ர்​பி‌ல் 1998, 1999, 2009 ஆகிய ஆ‌ண்​டு​க​ளி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு வெ‌ன்​று‌ள்​ளா‌ர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com