ஐபிஎல்: தொடர் வெற்றிகளால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள கொல்கத்தா அணி!

கொல்கத்தா அணி முதலிடத்துக்கு முன்னேறியதால் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.
ஐபிஎல்: தொடர் வெற்றிகளால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள கொல்கத்தா அணி!

ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா. இதனால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து ராஜஸ்தான் 139 ரன்களை சேர்த்தது. இறுதியில் 6 ஓவர்கள் மீதமிருக்க 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை குவித்தது கொல்கத்தா. 

கொல்கத்தா அணி முதலிடத்துக்கு முன்னேறியதால் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 கொல்கத்தா  5 4 1 8 +1.058
 சென்னை 5 4 1 8 +0.159
 ஹைதராபாத்  5 3 2 6 +1.000
 மும்பை 5 3 2 6 +0.342
 தில்லி 6 3 3 6 +0.131
 பஞ்சாப் 5 3 2 6 -0.094
 ராஜஸ்தான் 5 1 4 2 -0.848
 பெங்களூர் 6 0 6 0 -1.453

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com