பந்துவீச்சில் சாதனைகள் நிகழ்த்தும் ‘சீனியர்’ இம்ரான் தாஹிர்!

பந்துவீச்சில் சாதனைகள் நிகழ்த்தும் ‘சீனியர்’ இம்ரான் தாஹிர்!

82 ரன்கள் எடுத்த லின், ராணா, உத்தப்பா, ரஸ்ஸல் என முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா... 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்று வரை, சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் இடைவெளியில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. நேற்று, கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது சென்னை. இந்த வருடமும் பிளேஆஃப்-புக்கு நுழையவுள்ளது சென்னை அணி. இந்த நிமிடத்தில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு குறையும் இல்லை. 

சென்னை அணி வெற்றி பெற இம்ரான் தாஹிரின் பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது. 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் எடுத்து 27 ரன்கள் கொடுத்தார். 82 ரன்கள் எடுத்த லின், ராணா, உத்தப்பா, ரஸ்ஸல் என முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அதிக ரன்களை எடுக்க விடாமல் செய்தார். 

40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களில் ஐபிஎல்-லில் 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார் தாஹிர். இதற்கு முன்பு ஷேன் வார்னே, பிரவின் தாம்பே, பிராட் ஹாக் ஆகியோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

மேலும், 35 வயதுக்கு மேலான பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தாஹிர்.

66 - இம்ரான் தாஹிர் 
63 - முரளிதரன் 
57 - ஷேன் வார்னே 
46 - ஆஷிஷ் நெஹ்ரா 
45 - அனில் கும்ப்ளே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com