ஐபிஎல்: இவர்களின் பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பது அவ்வளவு சுலபமல்ல!

எதிரணி வீரர் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும்போது களத்தில் உள்ள 11 வீரர்களும் நடுங்கிப் போவார்கள்...
ஐபிஎல்: இவர்களின் பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பது அவ்வளவு சுலபமல்ல!

ஐபிஎல் போட்டி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. எல்லா அணிகளும் பிளேஆஃப் கனவுகளுடன் விளையாடி வருகின்றன. எந்தவொரு அணியும் அதற்கான தகுதியை இழக்கவில்லை. இதனால் அடுத்த வார இறுதி வரை அனைத்து அணிகளும் கடுமையான போட்டி மனப்பான்மையுடன் களத்தில் செயல்படும். 

ஐபிஎல் போட்டியில் ஆட்டங்களில் அதிகத் திருப்பத்தை ஏற்படுத்துபவை, சிக்ஸர்கள். எதிரணி வீரர் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும்போது களத்தில் உள்ள 11 வீரர்களும் நடுங்கிப் போவார்கள். எதிரணிகளுக்குத் தோல்வியை உணரவைக்கும் அற்புதமாக சக்தியாக உள்ளன சிக்ஸர்கள்.

ஆனால், ஏராளமான ஓவர்கள் வீசியும் பந்துவீச்சாளர்கள் சிலர் மட்டும் குறைவான சிக்ஸர்களையே அடிக்க விட்டிருக்கிறார்கள். டி20 ஆட்டத்தில் இது மெச்சத்தகுந்த சாதனை!

குறைந்த சிக்ஸர்களைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் (குறைந்தபட்சம் 25 ஓவர்கள்)

இஷாந்த் சர்மா (தில்லி): 180 பந்துகளில் 3 சிக்ஸர்கள்
எம். அஸ்வின் (பஞ்சாப்): 150 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 
ரஷித் கான் (ஹைதராபாத்): 240 பந்துகளில் 5 சிக்ஸர்கள்
தீபக் சஹார் (சென்னை): 252 பந்துகளில் 6 சிக்ஸர்கள்
பும்ரா (மும்பை): 232 பந்துகளில் 6 சிக்ஸர்கள்
ஜடேஜா (சென்னை): 240 பந்துகளில் 7 சிக்ஸர்கள்

அதிக சிக்ஸர்கள் வழங்கிய பந்துவீச்சாளர்கள் (ஐபிஎல் 2019)

18 சிக்ஸர்கள்: உனாட்கட்
18 சிக்ஸர்கள்: ஷமி
18 சிக்ஸர்கள்: சஹால்
15 சிக்ஸர்கள்: ஹார்திக் பாண்டியா
14 சிக்ஸர்கள்: உமேஷ் யாதவ்
13 சிக்ஸர்கள்: சிராஜ்
13 சிக்ஸர்கள்: குல்தீப்
13 சிக்ஸர்கள்: குல்கர்ணி
12 சிக்ஸர்கள்: கெளல்
12 சிக்ஸர்கள்: கோபால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com