8 ஐபிஎல் அணிகளும் 11 ஐபிஎல் போட்டிகளும்: முழு அலசல்!

பெங்களூர், தில்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது...
8 ஐபிஎல் அணிகளும் 11 ஐபிஎல் போட்டிகளும்: முழு அலசல்!

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-வது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையில் சிஎஸ்கேவும், இந்திய கேப்டன் கோலி தலைமையில் ஆர்சிபி அணிகளும் களமிறங்குகின்றன. 

இந்த ஐபிஎல்-லில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நகரத்தைச் சேர்ந்த அணிகளும் முதல் ஐபிஎல் போட்டி துவங்கி, கடந்த வருடம் வரை எந்தளவுக்குத் திறமையை வெளிப்படுத்தியுள்ளன. இதில் எது சிறந்த அணி? எந்த அணி மிக மோசம்? பார்க்கலாம். 

 அணி சாம்பியன்  பிளேஆஃப்- க்குத்   தகுதி  கடைசி 2   இடங்களில் 
 சென்னை  3 9 0
 மும்பை 3 7 1
 கொல்கத்தா  2 6 1
 ஹைதராபாத்  2 6 2
 ராஜஸ்தான் 1 4 1
 பெங்களூர் 0 5 3
 பஞ்சாப் 0 2  4
 தில்லி 0 3 5

* சென்னை அணி இதுவரை கலந்துகொண்ட 9 ஐபிஎல்களிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் மும்பை அணி. 11 ஐபிஎல்களில் 7 முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.

* அதிகமுறை ஐபிஎல் போட்டியை வென்ற அணிகள் - சென்னை & மும்பை, தலா 3 முறை. கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இருமுறை வென்றுள்ளன. 

* ஐபிஎல் இறுதிச்சுற்றில் அதிகமுறை தோல்வியடைந்த அணி, சென்னை சூப்பர் கிங்ஸ். 4 முறை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது. அடுத்த இடத்தில் பெங்களூர் - 3 முறை.

* ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை.

* பஞ்சாப், கடந்த 11 ஐபிஎல்களில் இருமுறைதான் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் கடைசி இரு இடங்களை 4 முறை பிடித்துள்ளது.

* கடைசி இரு இடங்களை அதிகமுறை பிடித்த அணிகளில் தில்லிக்குத்தான் முதலிடம். ஆரம்பத்தில் வலுவான அணியாக இருந்த தில்லி, பிறகு தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. 5 முறை கடைசி இரு இடங்களைப் பிடித்து தில்லி ரசிகர்களை மிகவும் சோதித்துள்ளது.

* இந்த வருடம் விளையாடுகிற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் என 8 அணிகளில் தில்லி அணிதான் ஒருமுறைகூட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை.

* பெங்களூர், தில்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.

* குறைந்த தடவை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றது, அதிகமுறை கடைசி இரு இடங்களைப் பிடித்தது போன்ற காரணங்களால் தில்லி, பஞ்சாப் ஆகிய அணிகளை ஐபிஎல்-லின் மோசமான அணிகளாகக் கருதலாம். 

10 ஐபிஎல் போட்டிகளும் அணிகளின் தேர்ச்சி விவரமும்

2008

சாம்பியன் - ராஜஸ்தான் ராயல்ஸ் 
இரண்டாம் இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, தில்லி
கடைசி இரு இடங்கள்: பெங்களூர், ஹைதராபாத் (கடைசி இடம்).

2009

சாம்பியன் - டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் 

இரண்டாம் இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) தில்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் 
கடைசி இரு இடங்கள்: மும்பை, கொல்கத்தா (கடைசி இடம்).

2010

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

இரண்டாவது இடம் - மும்பை இந்தியன்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர்
கடைசி இரு இடங்கள்: ராஜஸ்தான், பஞ்சாப் (கடைசி இடம்).

2011

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ் 

இரண்டாவது இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: புணே, தில்லி (கடைசி இடம்).

2012

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை
கடைசி இரு இடங்கள்: ஹைதராபாத், புணே (கடைசி இடம்).

2013

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத்
கடைசி இரு இடங்கள்: புணே, தில்லி (கடைசி இடம்).

2014

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) பஞ்சாப், கொல்கத்தா, சென்னை, மும்பை
கடைசி இரு இடங்கள்: பெங்களூர், தில்லி (கடைசி இடம்).

2015

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) சென்னை, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான்
கடைசி இரு இடங்கள்: தில்லி, பஞ்சாப் (கடைசி இடம்).

2016

சாம்பியன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இரண்டாவது இடம் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) குஜராத், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: புணே, பஞ்சாப் (கடைசி இடம்).

2017

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) மும்பை, புணே, ஹைதராபாத், கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: குஜராத், பெங்களூர் (கடைசி இடம்).

2018

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இரண்டாவது இடம் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான்
கடைசி இரு இடங்கள்: பஞ்சாப், தில்லி (கடைசி இடம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com