சோபிக்காத மிடில் ஆர்டர்: மும்பை அணி 176 ரன்கள் குவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்துள்ளது. 
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். இதில், ரோஹித் சர்மா அதிரடியாக ரன் குவித்தார். இதனால், டி காக் அவருக்கு ஒத்துழைப்பு தந்து நிதானம் காட்டினார். ரோஹித்தின் அதிரடியால் அந்த அணி 5 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை எட்டியது. எனினும் பவர் பிளேவின் கடைசி ஓவரில் ரோஹித் சர்மா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் அதிரடி காட்டி 6 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்து முருகன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு டி காக்குடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். இதில் யுவராஜ் சிங் நிதானமாக விளையாட டி காக் அதிரடிக்கு மாறி ரன் குவித்தார். இதனால், விக்கெட்டுகள் சரிந்த போதும் மும்பை அணியின் ரன் ரேட் நல்ல நிலையில் இருந்தது. முதல் 10 ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 91 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, டி காக் 35-ஆவது பந்தில் தனது அரைசதத்தை எட்டினார். இதைத்தொடர்ந்து, ஷமி ஓவரில் சிக்ஸர் அடித்த டி காக் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, யுவராஜ் மற்றும் போலார்ட்டு சோபிக்காமல் முறையே 18 மற்றும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து, கடந்த போட்டியை போல் ஹார்திக் பாண்டியா மட்டும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ரன் குவித்து கடைசி ஓவரில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது. 

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி, விஜோய்ன் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டை 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com