ஐபிஎல்: பிளே ஆஃப் செல்ல மீதமுள்ள 3 அணிகளும் என்ன செய்யவேண்டும்?

வார்னர் புண்ணியத்தில் நல்ல ரன்ரேட் வைத்திருப்பதால், ஆர்சிபி அணியைத் தோற்கடித்தாலே போதும்...
ஐபிஎல்: பிளே ஆஃப் செல்ல மீதமுள்ள 3 அணிகளும் என்ன செய்யவேண்டும்?

ஷுப்மன் கில், கிறிஸ் லீன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய கொல்கத்தா,பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையே மொஹாலியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது பஞ்சாப். அடுத்து ஆடிய கொல்கத்தா, 18 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 185 ரன்களை எடுத்து வென்றது. இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது கொல்கத்தா.

மீதமுள்ள ஆட்டங்கள்

சனி: தில்லி vs ராஜஸ்தான் 
ஹைதராபாத் vs பெங்களூர் 
ஞாயிறு: சென்னை vs பஞ்சாப் 
மும்பை vs கொல்கத்தா

பிளேஆஃப் சாத்தியக்கூறுகள்


ராஜஸ்தான்: 11 புள்ளிகள்

தில்லியுடன் இன்று மோதுகிறது. வேறு வழியே இல்லை. இதில் ஜெயித்தால் மட்டுமே மிஞ்சியுள்ள ஒரு வாய்ப்பையும் பெறமுடியும். ஜெயித்தாலும் 13 புள்ளிகள் என்பதால் இதர அணிகளின் வெற்றி, தோல்வியில்தான் ராஜஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிட்டும். 

அதற்கு, பெங்களூரிடம் ஹைதராபாத் தோற்கவேண்டும். அதேபோல மும்பையிடம் கொல்கத்தா தோற்கவேண்டும். இப்படி நடந்தால் ராஜஸ்தான் 13 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். பெங்களூரும் மும்பையும் ராஜஸ்தானுக்கு உதவுமா?

கொல்கத்தா: 12 புள்ளிகள்

ஞாயிறன்று லீக் சுற்றின் கடைசி ஆட்டம் கொல்கத்தா - மும்பை இடையே நடைபெறவுள்ளது. இதில் பெரிய அளவில் கொல்கத்தா வெல்லவேண்டும். அதேபோல ஹைதராபாத், ஆர்சிபியிடம் தோற்கவேண்டும். இது இரண்டும் நடந்தால் கொல்கத்தா பிளேஆப்புக்குத் தகுதி பெற்றுவிடும். 

பஞ்சாப்: 10 புள்ளிகள்

இந்தத் தோல்வியினால் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது பஞ்சாப் அணி. ஞாயிறன்று அந்த அணி சிஎஸ்கேவை வென்று 2 புள்ளிகள் பெற்றாலும் நெட்ரன்ரேட் மிகவும் குறைவாக உள்ளதால் பஞ்சாப் அணியால் அடுத்தக்கட்டத்துக்கு நகரமுடியாது.

ஹைதராபாத்: 12 புள்ளிகள் 

வார்னர் புண்ணியத்தில் நல்ல ரன்ரேட் வைத்திருப்பதால், ஆர்சிபி அணியைத் தோற்கடித்தாலே போதும். 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தயாராகி விடலாம். அதேசமயம் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக விளையாடுகிறது கொல்கத்தா. அதில் வென்று ஹைதராபாத்தின் நெட் ரன்ரேட்டை தாண்டிச் செல்லாமல் இருந்தால் மட்டுமே ஹைதராபாத் அடுத்தச் சுற்றுக்கு நகரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com