மீண்டு வந்த ஆஃப் ஸ்பின்னர்கள்: அசத்திய அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா!

மீண்டு வந்த ஆஃப் ஸ்பின்னர்கள்: அசத்திய அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா!

அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா ஆகிய மூவருக்கும் கடந்த வருட ஐபிஎல் நல்லவிதமாக அமையவில்லை...

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் லெக் ஸ்பின்னர்களுக்கே அதிக மதிப்பு. உலகக் கோப்பைப் போட்டிக்கான தேர்வில் குல்தீப் யாதவ், சாஹல் போன்ற மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஐபிஎல்-லில் அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா போன்ற விரல் சுழற்பந்துவீச்சாளர்கள் அசத்தியுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் குல்தீப், சாஹலை விடவும் இந்த மூவரும் அற்புதமாகப் பந்துவீசியுள்ளார்கள்.

ஆனால் அஸ்வின், ஹர்பஜன், ஜடேஜா ஆகிய மூவருக்கும் கடந்த வருட ஐபிஎல் நல்லவிதமாக அமையவில்லை. அதனால் அஸ்வினுக்கு உலகக் கோப்பை வாய்ப்பு அமையவில்லை. ஹர்பஜனால் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய முடியவில்லை. ஜடேஜா இந்திய அணிக்குள் நுழைய மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஆனால் இந்த வருடம் மூவருக்குமே அற்புதமாக அமைந்துள்ளது. அதற்கான ஆதாரம்: 

2018                                                                            2019

 விக்கெட்டுகள் எகானமி  வீரர்கள்                              விக்கெட்டுகள் எகானமி 
 10 8.09 அஸ்வின்     15 7.27
 7 8.48 ஹர்பஜன்    13 7.15
 11 7.39 ஜடேஜா       13 6.44

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com