Enable Javscript for better performance
Imran Tahir proves age is just a number with 4 wicket haul vs KKR- Dinamani

சுடச்சுட

    

    பந்துவீச்சில் சாதனைகள் நிகழ்த்தும் ‘சீனியர்’ இம்ரான் தாஹிர்!

    By எழில்  |   Published on : 16th April 2019 12:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tahir_csk12

     

    இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்று வரை, சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் இடைவெளியில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. நேற்று, கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது சென்னை. இந்த வருடமும் பிளேஆஃப்-புக்கு நுழையவுள்ளது சென்னை அணி. இந்த நிமிடத்தில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு குறையும் இல்லை. 

    சென்னை அணி வெற்றி பெற இம்ரான் தாஹிரின் பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது. 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் எடுத்து 27 ரன்கள் கொடுத்தார். 82 ரன்கள் எடுத்த லின், ராணா, உத்தப்பா, ரஸ்ஸல் என முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அதிக ரன்களை எடுக்க விடாமல் செய்தார். 

    40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களில் ஐபிஎல்-லில் 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார் தாஹிர். இதற்கு முன்பு ஷேன் வார்னே, பிரவின் தாம்பே, பிராட் ஹாக் ஆகியோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

    மேலும், 35 வயதுக்கு மேலான பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தாஹிர்.

    66 - இம்ரான் தாஹிர் 
    63 - முரளிதரன் 
    57 - ஷேன் வார்னே 
    46 - ஆஷிஷ் நெஹ்ரா 
    45 - அனில் கும்ப்ளே

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai