உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பிடித்தது எப்படி?: விராட் கோலி விளக்கம்!

விஜய் சங்கர் ஒரு சரியான பேட்ஸ்மேன். 4-ம் நிலை வீரருக்காக பல பேரை முயற்சி செய்தோம்...
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பிடித்தது எப்படி?: விராட் கோலி விளக்கம்!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் அறிவித்தது பிசிசிஐ. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருக்கு அணியில் இடமில்லை. ஆல்ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால், அம்பதி ராயுடுவால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.  பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் (3 டைமன்ஷன் திறமை) ஆகிய மூன்றை அடிப்படையாக வைத்து விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்று தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் சங்கர் தேர்வு குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விஜய் சங்கர் ஒரு சரியான பேட்ஸ்மேன். 4-ம் நிலை வீரருக்காக பல பேரை முயற்சி செய்தோம். விஜய் சங்கர் உள்ளே வந்தபோது அவர் மூன்று வகைத் திறமைகள் கொண்ட வீரராக இருந்தார். அவரால் பந்துவீச முடியும், ஃபீல்டிங் செய்ய முடியும், பேட்டிங் செய்ய முடியும். இத்தனை வருடங்களாக இதர அணிகள் இதுபோன்ற திறமைகளை வைத்திருக்கும்போது நாமும் ஏன் அப்படியொரு வீரரை வைத்திருக்கக் கூடாது என எண்ணினோம். அந்த ஓர் எண்ணத்திலிருந்து அனைவரும் ஒருமனதானோம். 

உலகக் கோப்பைப் போட்டியில் என்ன மாதிரியாக விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். யார் யார் எந்தெந்த நிலைகளில் விளையாடப் போகிறார்கள் என்பதை பிறகு முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com