கொல்கத்தாவை வீழ்த்திய வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி: 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் விவரம்: http://bit.ly/2Drf8Rt

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இந்த ஜோடி தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, கரியப்பா என அனைத்து பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்து விளையாடினர். இதனால், முதல் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள், 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் என அதிரடியாக விளையாடியது. 

இதனிடையே இருவரும் தங்களது 30-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தனர். கொல்கத்தா அணி கேட்சுகளை தவறவிட்டதால் அரைசதம் அடித்த பிறகும் இந்த ஜோடி அதிரடியாக ரன் குவித்தது.

இதையடுத்து, டேவிட் வார்னர் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்ஸன் நிதானம் காட்ட, பேர்ஸ்டோவ் தனது அதிரடி பாணியை தொடர்ந்தார். இதன்மூலம், அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 161 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பேர்ஸ்டோவ் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 80 ரன்கள் எடுத்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com