சிஎஸ்கே வெற்றிக்கு 1 ஓவரில் 26 ரன்கள் தேவை: பிறகு என்ன நடந்தது? (விடியோ)

6 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் உமேஷ் யாதவ் 20-ஆவது ஓவரை வீசியபோது...
சிஎஸ்கே வெற்றிக்கு 1 ஓவரில் 26 ரன்கள் தேவை: பிறகு என்ன நடந்தது? (விடியோ)

கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது சென்னை. தோனியின் அபார ஆட்டம் (84 ரன்கள்) விழலுக்கு இறைத்த நீரானது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது பெங்களூரு. ஆனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை 160 ரன்களையே எடுத்தது. தோனி 7 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

6 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் உமேஷ் யாதவ் 20-ஆவது ஓவரை வீசியபோது, தோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசினார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சர்துல் தாகுரை ரன் அவுட் செய்தார் பார்த்திவ் பட்டேல். இதனால் பரபரப்பான முறையில் நடந்து முடிந்தது நேற்றைய ஆட்டம்.

கடைசி ஓவரில், தோனியின் மறக்க முடியாத ஆட்டத்தின் விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com