இடைவிடாத சிக்ஸர் மழை: புதிய சாதனைகள் நிகழ்த்திய தோனி!

ஐபிஎல் போட்டியில் இதுவரை 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்...
இடைவிடாத சிக்ஸர் மழை: புதிய சாதனைகள் நிகழ்த்திய தோனி!

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது சென்னை. தோனியின் அபார ஆட்டம் (84 ரன்கள்) விழலுக்கு இறைத்த நீரானது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது பெங்களூரு. ஆனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை 160 ரன்களையே எடுத்தது. தோனி 7 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

6 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் உமேஷ் யாதவ் 20-ஆவது ஓவரை வீசியபோது, தோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசினார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சர்துல் தாகுரை ரன் அவுட் செய்தார் பார்த்திவ் பட்டேல். இதனால் பரபரப்பான முறையில் நடந்து முடிந்தது நேற்றைய ஆட்டம்.

இந்நிலையில் நேற்றைய அதிரடி ஆட்டத்தின் மூலம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் தோனி.

* நேற்று 7 சிக்ஸர்கள் அடித்தார் தோனி. ஐபிஎல் ஆட்டத்தில்  மீண்டுமொரு முறை அவர் 7 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

* நேற்று 84* ரன்கள் எடுத்தார். ஐபிஎல்-லில் மட்டுமல்லாமல் டி20 ஆட்டத்திலும் இது தோனியின் அதிகபட்ச ஸ்கோர்.

* ஐபிஎல் போட்டியில் இதுவரை 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

* ஐபிஎல் போட்டியில் கேப்டனாக 4000 ரன்களைக் கடந்த முதல் வீரரும் தோனி தான். 

ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் அதிக தடவை 20+ ரன்கள் எடுத்த வீரர்கள்

தோனி - 4
ரோஹித் சர்மா - 3
யுவ்ராஜ் சிங், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் - 2

* ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் கடைசி ஓவரில் 26 ரன்கள் என்கிற இலக்கை அடைந்ததில்லை. நேற்று தோனி 26 ரன்கள் எடுத்திருந்தால் அது புதிய சாதனையாக இருந்திருக்கும். 

* கடைசி 4 ஓவர்களில் தோனி எடுத்த ரன்கள்: 21 பந்துகளில் 55* ரன்கள், 6 சிக்ஸர், 2 பவுண்டரிகள். 

16 - 20 ஓவர்கள் வரை அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் - ஐபிஎல் 2019

62* ரிஷப் பந்த்
55* தோனி
51* சஞ்சு சாம்சன் 
48* ரஸ்ஸல்

* தோனி நேற்று அடித்த ஒரு சிக்ஸர் 111 மீ. தாண்டிச் சென்றது. இந்த வருட ஐபிஎல்-லில் அதிகத் தூரம் சென்ற சிக்ஸர் அதுதான். 

2019 ஐபிஎல்: அதிகத் தூரம் சென்ற சிக்ஸர்கள்

தோனி - 111 மீ.
பாண்டியா - 104 மீ.
லின் - 102 மீ.
கெயில் - 101 மீ.
உமேஷ் யாதவ் - 101 மீ.

குறைந்த ரன்களில் சிஎஸ்கே தோற்ற ஆட்டங்கள்

1 vs ஆர்சிபி, பெங்களூர் 2019 (தோனி 84* - அதிக டி20 ஸ்கோர்) 
4 vs பஞ்சாப், மொஹலி 2018 (தோனி 79* -  அப்போது அவருடைய அதிக T20 ஸ்கோர்)

தோல்வியடைந்த ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் தோனி எடுத்த ரன்கள்

63(45)* vs மும்பை, கொல்கத்தா 2013 
42(31)* vs பஞ்சாப், மும்பை 2014 
79(44)* vs பஞ்சாப், மொஹலி 2018 
84(48)* vs ஆர்சிபி, பெங்களூர் 2019

* கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாட ஆரம்பித்த பிறகு தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் சிஎஸ்கே தோற்றதில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com