அதிர்ஷ்டவசமாகத் தப்பிய ஆர்சிபி: உமேஷ் யாதவின் கடைசி ஓவர்களின் வரலாறு தெரியுமா?

கடைசி ஓவரை மோசமாக வீசிய பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவுக்குத் தனி இடம் உண்டு...
அதிர்ஷ்டவசமாகத் தப்பிய ஆர்சிபி: உமேஷ் யாதவின் கடைசி ஓவர்களின் வரலாறு தெரியுமா?

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது சென்னை. தோனியின் அபார ஆட்டம் (84 ரன்கள்) விழலுக்கு இறைத்த நீரானது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது பெங்களூரு. ஆனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை 160 ரன்களையே எடுத்தது. தோனி 7 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

6 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் உமேஷ் யாதவ் 20-ஆவது ஓவரை வீசியபோது, தோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசினார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சர்துல் தாகுரை ரன் அவுட் செய்தார் பார்த்திவ் பட்டேல். இதனால் பரபரப்பான முறையில் நடந்து முடிந்தது நேற்றைய ஆட்டம்.

இந்நிலையில் நேற்றைய சிஎஸ்கே இன்னிங்ஸில் கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ், கடைசிப் பந்தை மட்டும் சரியாக வீசி பெரிய பாதிப்பிலிருந்து தப்பித்தார். உண்மையில் கடைசி ஓவரை மோசமாக வீசிய பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவுக்குத் தனி இடம் உண்டு. இது தெரிந்தும் கோலி எப்படி உமேஷுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார் என்பது ஆச்சரியமே! நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு உமேஷ் யாதவ், டிண்டா, பிராவோ என மூவரும் 20-வது ஓவரில் 20 ரன்களுக்கும் அதிகமாகக் கொடுத்துள்ளார்கள். நேற்றைய ஆட்டத்தின் மூலம் டிண்டா, பிராவோ ஆகிய இருவரையும் தாண்டிவிட்டார் உமேஷ் யாதவ். 

ஐபிஎல் போட்டியில், 20-வது ஓவரில் அதிகமுறை 20க்கும் மேற்பட்ட ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்

உமேஷ் யாதவ் - 4
அசோக் டிண்டா - 3
டுவைன் பிராவோ - 3

ஒரு ஓவரில் அதிக தடவை 20 ரன்களுக்கும் அதிகமாகக் கொடுத்தவர்கள்

பிரவீன் குமார் - 14
உமேஷ் யாதவ் - 11
அமித் மிஸ்ரா - 9
டேல் ஸ்டெயின், இஷாந்த் சர்மா - 8.

ஐபிஎல் 2019 - மோசமான எகானமி கொண்ட பந்துவீச்சாளர்கள் (குறைந்தபட்சம் 20 ஓவர்கள்)

உனாட்கட் - 11.08
சாம் கரண் - 9.88
உமேஷ் யாதவ் - 9.66

ஐபிஎல் 2019 - குறைந்த விக்கெட்டுகள் (குறைந்தபட்சம் 20 ஓவர்கள்)

பிரசித் கிருஷ்ணா - 2 விக்கெட்டுகள்
உமேஷ் யாதவ் - 4 விக்கெட்டுகள்
குல்தீப் யாதவ் - 4 விக்கெட்டுகள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com