சுடச்சுட

  

  பவர்பிளே பகுதியில் இஷ்டத்துக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே!

  By எழில்  |   Published on : 27th April 2019 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PTI4_26_2019_000245A

   

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் இந்தமுறை மிகவும் ஏமாற்றுகிறது. தோனியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை. அதிலும் பவர்பிளேயில் (1-6 ஓவர்கள்) அதிக விக்கெட்டுகளை இழப்பதால், பின்னால் வரும் வீரர்களுக்குப் பெரும் சுமையாகிவிடுகிறது. 

  இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் பவர்பிளே பகுதியில் மட்டும் 24 விக்கெட்டுகளை இழந்துள்ளது சிஎஸ்கே. ஆனால் இதற்கு நேர்மாறாக சன்ரைசர்ஸ் அணி, 10 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்!

  பவர்பிளேயில் சென்னை அணியின் ரன்ரேட் 6.40 மட்டுமே. 8 அணிகளில் இதுதான் மிகவும் குறைவானது. முதலிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி, 9.06 ரன்ரேட் வைத்துள்ளது. பவர்பிளே பகுதியில் 5 முறை குறைந்தபட்சம் 3 விக்கெட்டுகளையாவது இழந்துள்ளது சென்னை. 

  இதுபோல சென்னை அணி பவர்பிளே பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்து அதிக ரன்களும் குவிக்காமல் இருந்தாலும் இத்தனை வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம், தோனியின் பேட்டிங்கும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பும் தான். 

  பவர்பிளேயில் வீழ்ந்த விக்கெட்டுகள்

  சென்னை - 24
  கொல்கத்தா - 19
  பெங்களூர் - 13
  தில்லி - 13
  பஞ்சாப் - 12
  ராஜஸ்தான் - 12
  மும்பை - 10
  ஹைதராபாத் - 5

  (இவற்றில் சென்னை 12 ஆட்டங்களும் சன்ரைசர்ஸ் 11 ஆட்டங்களும் இதர அணிகள் 11 ஆட்டங்களையும் விளையாடியுள்ளன.) 

  சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு தரப்பட்டது. கடந்த 2010-க்கு பின் இரண்டாவது முறையாக சென்னை அணி சார்பில் ஆடாமல் உள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். அதே போல் டூபிளெஸிஸ், ஜடேஜா ஆகியோரும் ஆடவில்லை. முரளி விஜய், ஷோரே அணியில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களைக் குவித்தது. ஆனால் மோசமான பேட்டிங்கினால், 15 பந்துகள் மீதமிருக்க, 17.4 ஓவர்களிலேயே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சென்னை. இந்த வருட ஐபிஎல் போட்டியில், சொந்த மைதானத்தில் தோல்வியே பெறாமல் இருந்த சென்னை தற்போது மும்பையிடம் தோல்வியைத் தழுவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai