ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள்: முழு விவரம்!

ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம்...
ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள்: முழு விவரம்!

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. 

ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள்

2008 - தோனி (1.5 மில்லியன் டாலர், சிஎஸ்கே)
2009 - பிளிண்டாப் (சிஎஸ்கே)/கெவின் பீட்டர்சன் (தலா 1.55 மில்லியன் டாலர், ஆர்சிபி)
2010- ஷேன் பாண்ட்/பொலார்ட் (0.75 மில்லியன் டாலர், மும்பை)
2011 - கம்பீர் (2.4 மில்லியன் டாலர், கேகேஆர்)
2012 - ஜடேஜா ( 2 மில்லியன் டாலர், சிஎஸ்கே)
2013 - மேக்ஸ்வெல் ( 1 மில்லியன் டாலர், மும்பை)
2014 - யுவ்ராஜ் சிங் (ரூ. 14 கோடி, ஆர்சிபி)
2015 - யுவ்ராஜ் சிங் (ரூ. 16 கோடி, டெல்லி)
2016 - வாட்சன் (ரூ. 9.50 கோடி, ஆர்சிபி)
2017 - ஸ்டோக்ஸ் (ரூ. 14.50 கோடி, புணே)
2018 - ஸ்டோக்ஸ் (ரூ. 12.50 கோடி, ராஜஸ்தான்)
2019 - உனாட்கட் (ராஜஸ்தான்)/வருண் சக்கரவர்த்தி (தலா ரூ. 8.40 கோடி, பஞ்சாப்)

2019 ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வானவர்கள்

ரூ. 8.40 கோடி - ஜெயதேவ் உனாட்கட் (ராஜஸ்தான்)
ரூ. 8.40 கோடி - வருண் சக்கரவர்த்தி (பஞ்சாப்)
ரூ. 7.20 கோடி - சாம் கரண் (பஞ்சாப்)
ரூ. 6.40 கோடி - காலின் இங்க்ரம் (தில்லி)
ரூ. 5 கோடி - கார்லஸ் பிராத்வைட் (கொல்கத்தா), அக்‌ஷர் படேல் (தில்லி), மோஹித் சர்மா (சென்னை), ஷிவம் டுபே (பெங்களூர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com