4 வருடங்களாக சிஎஸ்கே அணியைத் தோற்கடிக்க முடியாத ஆர்சிபி: தோனியின் சவாலை முறியடிப்பாரா விராட் கோலி?

அதற்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஆறு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியே...
4 வருடங்களாக சிஎஸ்கே அணியைத் தோற்கடிக்க முடியாத ஆர்சிபி: தோனியின் சவாலை முறியடிப்பாரா விராட் கோலி?

2014-ல் சிஎஸ்கே அணியைக் கடைசியாகத் தோற்கடித்தது ஆர்சிபி. அதற்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஆறு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியே வெற்றி கண்டுள்ளது. 

ஐபிஎல் 2019 போட்டி 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 23 ஆட்டங்களில் சென்னை அணி 15 ஆட்டங்களிலும் ஆர்சிபி 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன (ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை). இந்த நிலையில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறார் கோலி. அது நடக்குமா?

சிஎஸ்கே கேப்டன் தோனி, ஆர்சிபிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை விளையாடிய 25 ஆட்டங்களில் 710 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. இதில் மூன்று அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 140.59. மேலும் கடந்த வருடம் தோனி அபாரமான ஃபார்மில் இருந்தார். 16 ஆட்டங்களில் 455 ரன்கள் எடுத்தார். 2013-ல் 461 ரன்கள் எடுத்த பிறகு கடந்த வருடம்தான் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தார் தோனி. 

நாளைய ஆட்டம் ஆர்சிபி அணிக்குக் கடும் சவாலை அளிக்கும். புதிய அத்தியாயம் படைப்பாரா கோலி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com