ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா?

ஐபிஎல் போட்டியை வெற்றி திரையரங்கில் ஒளிபரப்ப முடியுமா எனப் பலரும் கேட்டுள்ளீர்கள். இதற்கான பதில்...
ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா?

ஐபிஎல் போட்டியைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப வாய்ப்புண்டா என்கிற கேள்விக்கு சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

ஐபிஎல் போட்டியை வெற்றி திரையரங்கில் ஒளிபரப்ப முடியுமா எனப் பலரும் கேட்டுள்ளீர்கள். இதற்கான பதில் - முடியாது. 

சட்டத்தின்படி, தணிக்கை பெற்ற படங்கள், காட்சிகளை மட்டுமே திரையரங்குகளில் திரையிட முடியும். நேரலை ஐபிஎல் ஆட்டங்களைத் தணிக்கை செய்யமுடியாது!

இந்த விதிமுறை மாற்றப்பட்டால், வருங்காலத்தில் திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப முடியும் என்று கூறியுள்ளார். 

கடந்த வருடம், திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தமிழ்த் திரையுலகம் வேலை நிறுத்தம் செய்தது. இதனால் சிறிது காலம் புதிய படங்கள் வெளிவரவில்லை. இதையடுத்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தது. இதனால் உண்டான நஷ்டத்தை ஈடுகட்ட ஐபிஎல் ஆட்டங்களைத் தங்களது திரையரங்குகளில் ஒளிபரப்ப சென்னையைச் சேர்ந்த சில திரையரங்குகள் முன்வந்தன. ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தன. எனினும் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com