சூர்யகுமார் யாதவ் சூப்பர்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை

சென்னைக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 
நன்றி: டிவிட்டர்/ஐபிஎல்
நன்றி: டிவிட்டர்/ஐபிஎல்


சென்னைக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. 

132 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணிக்கு பவுண்டரி அடித்து தொடக்கம் தந்தார் ரோஹித் சர்மா. ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்கார் டி காக் 8 ரன்களுக்கு ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை துல்லியமாக எதிர்கொண்டது. அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டிலும் சென்னை அணிக்கு நெருக்கடியளித்தனர். ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா என சுழற்பந்துவீச்சாளர்களாலும் இந்த பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. இவர்களது சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 14-வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது.  

இந்த நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷனை தாஹிர் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த பந்திலேயே க்ருணால் பாண்டியா விக்கெட்டையும் தாஹிர் வீழ்த்தினார். ஆனால், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் ஓவருக்கு 6 ரன்களுக்கு கீழ் இருந்ததால், இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

இதனிடையே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து மும்பை பேட்டிங்கில் நம்பிக்கையளித்தார். அதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 

மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். ஹார்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்தார். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி எலிமினேட்டர் போட்டியில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com