சிக்ஸர் வானவேடிக்கை: அசத்திய பிருத்வி ஷா, ரிஷப் பந்த் (விடியோ)

பரபரப்பான கடைசி ஓவரில் ஹைதராபாத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று த்ரில் வெற்றி பெற்றது தில்லி...
சிக்ஸர் வானவேடிக்கை: அசத்திய பிருத்வி ஷா, ரிஷப் பந்த் (விடியோ)

பரபரப்பான கடைசி ஓவரில் ஹைதராபாத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று த்ரில் வெற்றி பெற்றது தில்லி. பிருத்வி ஷா 56, ரிஷப் பந்த் 49 ஆகியோர் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியால் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சென்னையுடன் மோதுகிறது தில்லி.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் ஒரு பகுதியாக தில்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் (வெளியேறும் சுற்று) விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.

163 ரன்கள் வெற்றி இலக்குடன் தில்லி தரப்பில் களமிறங்கிய ஷிகர் தவன்-பிருத்வி ஷா ஆகியோர் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 56 ரன்களை விளாசிய பிருத்வி ஷா, கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரிஷப் பந்தின் வான வேடிக்கை தொடர்ந்தது. பசில் தம்பி வீசிய 18-வது ஓவரில் 21 ரன்களை விளாசினார்.  வெற்றிக்கு மிக அருகில் அழைத்து வந்த ரிஷப் பந்த் 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 49 ரன்களை எடுத்து புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது தில்லி. வெள்ளிக்கிழமை நடைபெறும் குவாலிபையர்-2 ஆட்டத்தில் தில்லி - சென்னை அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com